பிஜேபியின் ஸ்வச் பாரத்.. வேலூர் சிறுமி வீட்டில் பாத்ரூம் எங்கே? சரத்குமார் சரவெடி.. முக்கிய கோரிக்கை
வேலூர்: பெண்குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோரும் அரசும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பாலியல் குற்றங்களுக்கு உடனடியான தீர்ப்பு வழங்கி, நீதித்துறை கடும் தண்டனைகளை விதிக்க வேண்டும் என்றும், வேலூர் சிறுமி சம்பவத்தை சுட்டிக்காட்டி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதான ஒரு சிறுமி, தன்னுடைய வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.. நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால், சிறுமியை தேடிக்கொண்டு அவரது அப்பா அந்த பகுதிக்குச் சென்றார்.

உறவினர்கள்: அப்போது, 3 இளைஞர்கள் தன்னுடைய மகளை வாயைப்பொத்தி அருகேயுள்ள கல்குவாரி பகுதிக்கு தூக்கிச் சென்று அத்துமீறிக் கொண்டிருந்ததைக் கண்டு, அதிர்ந்துபோனார்.. அந்த 3 இளைஞர்களுமே சிறுமியின் உறவினர்கள் என்பதை கண்டு அதற்குமேல் அதிர்ச்சியில் உறைந்தார்.. இதனால் அலறி கூச்சலிட்டு, அக்கம்பக்கத்திலிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். ஆனால் அதற்குள் 3 இளைஞர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த விவகாரம் வெளியே தெரிந்தால், தன்னுடைய குடும்பத்துக்கே அவமானம் என்று நினைத்த தந்தை, முதலில் புகார் தராமல், உறவினரின் வீட்டுக்கு மகளை அனுப்பி வைத்திருக்கிறார்.. ஆனால், சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பிறகே இந்த விவகாரம் வேலூர் எஸ்பியின் கவனத்துக்கு சென்றுள்ளது.
போக்சோ: உடனடியாக எஸ்.பி உத்தரவின்பேரில், வேலூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து, வீரப்பன் (28), மதன் என்கிற இளமதன் (28), சின்னராசு (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.. இப்போது வேலூர் ஜெயிலிலும் உள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
அரசியல் கட்சிகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.. திமுக அரசையும் விமர்சித்து, வேலூர் சம்பவத்துக்கு நீதி கேட்டு வருகிறார்கள். அந்த வகையில், சமக தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..
அவரது பதிவில், "ஒவ்வொரு நாளும் கொலை மற்றும் பாலியல் பலாத்கார செய்திகளைக் கண்டும் கேட்டுமே மக்கள் மனம் பாதிப்படைந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றும் அளவிற்ற்கு தொடர்ச்சியாக இங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவது ஆழமான வேதனையை அளிக்கிறது.
இயற்கை உபாதை: வேலூரில் இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்ற 13 வயது சிறுமி மது போதையில் இருந்த 3 நபர்களால் கல்குவாரிக்குத் தூக்கிச் செல்லப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்துப் புகார் அளிக்கச் சென்றபோது, சம்பவம் நடந்த இடம் வேறு எல்லையில் வருவதாகக் கூறி அங்கும் இங்கும் சிறுமியின் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பையும் ஆறுதலையும் அளித்து இது போன்ற சூழலில் அவர்கள் பிற காவல் நிலையங்களில் புகார் அளித்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் சட்டரீதியான வழிகள் குறித்து சிந்திக்க வேண்டுமே அல்லாமல், துன்பத்தில் இருப்பவர்களை அலைக்கழிக்கக் கூடாது என சுட்டிக்விரும்புகிறேன்.
தலைப்பு செய்தி: இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாலியல் குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து ஊடகங்கள் தலைப்புச் செய்தி வெளியிட வேண்டும்.
பெரும்பான்மையான வன்முறை சம்பவங்களுக்கு போதையே அடிப்படைக் காரணமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு மது விற்பனைக்கு உறுதியான நேரக் கட்டுப்பாடுகள் கொண்டுவருவதை அரசும் காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும். பெண்களின் சிரமங்களைக் குறைத்து, பாதுகாப்பை உறுதி செய்ய, வீட்டில் கழிவறைகள் அமைக்க வேண்டுமென்று மத்திய அரசு நலத்திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், இது போன்ற பகுதிகளில் இன்னும் கழிவறைகள் இல்லாதது ஏன் என்று விசாரிக்கப்பட வேண்டும்.
கழிவறை: பெண்குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோரும் அரசும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதோடு, பாலியல் குற்றங்களுக்கு உடனடியான தீர்ப்பு வழங்கி,கடும் தண்டனைகளை விதிக்க வேண்டும் என்று நீதித்துறையிடம் பணிவான கோரிக்கை முன் வைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2011-ல் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகரப்புறங்களில் வாழும் மக்களில் 12.6%, கிராமப் பகுதிகளில் 68% குடும்பங்களை சோ்ந்தவா்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஸ்வச் பாரத்: ஆனால், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடமே இல்லாத நாடு என்ற நிலை உருவாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டு அதை நோக்கி மெதுவாக நாடு நகா்ந்துவருகிறது. ஸ்வச் பாரத் திட்டத்தின் மானிய உதவி பெற்று 11.7 கோடிக்கும் மேல் வீடுகளில் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை நாட்டின் 50 சதவீத கிராமங்கள் எட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுவும் தமிழ்நாட்டில் 97.8 சதவீத கிராமங்கள் இந்த நிலையை அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கழிவறைகள் : இப்படிப்பட்ட சூழலில், "வீட்டில் கழிவறைகள் அமைக்க வேண்டுமென்று மத்திய அரசு நலத்திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், இது போன்ற பகுதிகளில் இன்னும் கழிவறைகள் இல்லாதது ஏன் என்று விசாரிக்கப்பட வேண்டும்" என்று சரத்குமார் கூறியிருப்பது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
"ஒருபுறம் போதையின் பாதையை தவிருங்கள் என்று கூறிக் கொண்டு இன்னொரு புறம் மது வணிகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கான இலக்கணமா? என்பது தெரியவில்லை. சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதுடன், மதுக்கடைகளை உடனடியாக மூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணியும் கேட்டுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications