உடலெங்கும் சூடு.. சித்தியின் அட்ராசிட்டி.. அலறி துடித்த பிஞ்சுகள்.. குடியாத்தத்தில் இன்னொரு துளசி
முதல் மனைவி குழந்தைகளுக்கு இளம்பெண் சூடு வைத்துள்ளார்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகரை சேர்ந்தவர் சேட்டு.. 35 வயதாகிறது.. இவர் ஒரு கூலி தொழிலாளி... இவரது மனைவி பெயர் ஈஸ்வரி.. 2009-ல் கல்யாணம் ஆகி உள்ளது.
காதலித்து ஈஸ்வரியை திருமணம் செய்தவர் சேட்டு.. 10 மற்றும் 8 வயதில் 2 மகன்கள் உள்ளனர்... அவர்கள் 5-ம் வகுப்பும், மற்றும் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் தம்பதிக்குள் ஏதோ தகராறு வெடித்துள்ளது.. அதனால், கடந்த 2018-ம் ஆண்டு ஈஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்... எனவே, வேணி என்பவரை 2019-ம் ஆண்டு சேட்டு 2வதாக திருமணம் செய்து கொண்டார். வேணி செதுக்கரை என்ற பகுதியை சேர்ந்தவர்.

கூலி வேலை
இவர்கள் 4 பேரும் பிச்சனூரில் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.. சேட்டு கூலி வேலை செய்வதால், காலையில் போனால், நைட்டுதான் வீட்டுக்கு திரும்புவார்.. இதுதான் வேணிக்கு வசதியாக போயிற்ற.. முதல் மனைவி குழந்தைகளை வேணிக்கு பிடிக்கவே இல்லை.. அதனால், பகலெல்லாம் அந்த குழந்தைகளை சித்ரவதை செய்து வந்துள்ளார்..

கொப்புளங்கள்
தேவையே இல்லாமல், அந்த குழந்தைகளுக்கு கரண்டி, கத்தியில் சூடு வைத்துள்ளார்.. அவர்களின் முதுகு, கை, கால் என உடம்பெல்லாம் வெந்து போய் கொப்புளங்கள் உள்ளன.. ஒவ்வொரு முறையும் சித்தி சூடுவைக்கும்போதும், அந்த குழந்தைகள் அலறித்துடித்துள்ளன.. அப்பாவிடம் சொன்னால், கொன்று புதைத்துவிடுவதாகவும் அவர்களை மிரட்டி உள்ளார் வேணி..

ஆணுறுப்பு
அந்த பிள்ளைகளும் பயத்தில் சொல்லாமல் இருந்துள்ளனர்... இதன் உச்சக்கட்டமாக, இரு குழந்தைகளின் ஆணுறுப்பிலும் சூடு வைத்துள்ளார்... இதில் அவர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டு வெந்து போயுள்ளளன.. எப்போது கோபம் வந்தாலும், வேணி முதலில் கையில் எடுப்பது பூரிக்கட்டையைதானாம்.. அதில்தான் நிறைய முறை குழந்தைகளை சரமாரியாக அடித்துள்ளார்..

போலீஸ்
இந்நிலையில் இளைய மகன் நித்தீஷ், தன்னுடைய பெரியம்மா மரியா வீட்டிற்கு சென்றுள்ளான்.. அங்குதான் சித்தி உடம்பில் சூடு வைத்ததை காட்டியுள்ளான்... இதை பார்த்து பதறிப்போன அவர்கள், குடியாத்தம் டவுன் போலீஸில் புகார் செய்யவும், உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது... இந்த தகவலறிந்த வேலூர் சரக டிஐஜி ஏஜிபாபு, மாவட்ட எஸ்பி செல்வகுமார் ஆகியோர்உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர்.

விசாரணை
இதனை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று வேணியை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.. மூத்த மகனிடமும் தீவிர விசாரணை நடத்தினர்... விசாரணையில் 2 குழந்தைகளும் நடந்த கொடுமைகளை சொன்னார்கள்.. உடலிலுள்ள காயங்களையும் காட்டினர்... எங்கே தங்கள் மணவாழ்க்கைக்கு பிள்ளைகள் குறுக்கே வந்துவிடுவார்களோ என்று பயந்துதான் சூடு வைத்தேன் என்று வேணி போலீசில் சொன்னாராம்..

பரபரப்பு
இறுதியில், சிறுவர்களை கொடுமைப்படுத்திய வேணி மீது சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் 2 சிறுவர்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்... யார் பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும், தன் பிள்ளைகளாவே மனதில் சுமக்கும் எத்தனையோ தாய்மார்கள் தற்போதும் உள்ள நிலையில், வேணி போன்ற கொடூரர்களை என்னவென்று சொல்வது?












Click it and Unblock the Notifications