நான் நேரில் அழகாக இருக்கிறேன்னு சொல்ல வர்றீங்களா.. இப்படியா பேசறது.. ஸ்டாலின் மீது சீமான் அட்டாக்
முக ஸ்டாலினை சீமான் கடுமையாக விமர்சித்து பேசினார்
வேலூர்: "டிவியில பார்க்கிறதைவிட நேரில பார்க்க அழகா இருக்கேன்னு சொல்ல வர்றீங்களா..ன்னு ஸ்டாலின் பெண்களை பார்த்து கேட்கிறார்.. ஐயோ.. கேவலம்.. ஒரு எதிர்க்கட்சி தலைவர் இப்படியா பேசறது?" என்று சீமான் திமுக தலைவரை கடுமையாக சாடி பேசி உள்ளார்.
வேலூரில் 5-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த மும்முனை போட்டியில் நாம் தமிழர் கட்சியும் ஒன்றாகும். வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
"வாக்கு சீட்டுதான் நமக்கு தேவை.. அமெரிக்காவில, ஜப்பான்ல, இப்படி உலகத்துல எங்கியுமே இந்த வாக்கு எந்திர முறை இல்லை. 2 நாட்டிலதான் இந்த வாக்கு எந்திர முறை இருக்கு. ஒன்னு நைஜீரியாவில், இன்னொன்னு இந்தியாவில்.. இந்த ரெண்டு நாடுமே ஊழலில் பெருத்த நாடுகள்.

உனக்கு என்ன வேலை?
இப்போ வேலூரில் 5-ம் தேதி தேர்தல் முடிஞ்சி போகுது இல்லை.. நீதான் டிஜிட்டல் இந்தியாவில இருக்கியே.. தட்டினா கடகடன்னு ரிசல்ட் சொல்லிடும் இல்லே.. ஒரு மணி நேரத்துல, ரெண்டு மணி நேரத்துல எண்ணி சொல்லு.. யார் பாராளுமன்ற உறுப்பினர் என்று? நீ எதுக்கு 9-ம் தேதி வரைக்கும் மூடி வெக்கிறே? எதுக்கு டிஜிட்டல் இந்தியான்னு பீத்திக்கிறே? 9-ம் தேதி வரைக்கும் உனக்கு என்ன வேலை?

ஆட்டம் ஆடுவேன்
இனி 2021- தேர்தலில் ஆட்டமே நான்தான் ஆடுவேன்.. சீமானுக்கு ஓட்டு போட்டால் பாஜக வந்துடும்னு எந்த பம்மாத்தும் அன்னைக்கு செல்லாது. "நாங்கள் வந்தால், நாங்கள் வேளான் கடனை ரத்து செய்வதாக சொன்னோமே.." இப்படி எதுவும் செல்லாது.

உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் இதே வேலூரில் அன்னைக்கு சொல்றாரு.. கூட்டுறவு வங்கியில் நகையை 5 ஆயிரத்துக்கு அடமானம் வெச்சிக்குங்க.. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதனை திருப்பி குடுத்துடறோம்" னு சொல்றார். உலகத்துல இப்படி ஒரு தலைவனை எங்காவது பார்த்திருக்கங்களா? கேவலம்!

அழகாக இருக்கிறேனா?
மாநிலத்தின் துணை முதல்வரா இருந்தவர், ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சியா இருக்கிறவர் சொல்றாரு, "பெண்கள் எல்லாம் டிவி பாக்கிறதை விட்டுட்டு, சீரியல் பாக்கிறதை விட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள். தொலைக்காட்சியில் பார்த்தவன் நேரில் அழகாக இருக்கிறானா இல்லையா என்பதை பார்க்க வந்திருக்கிறீர்கள். நான் அழகாகத்தான் இருக்கிறார் என்று சொல்ல வருகிறீர்களா"ன்னு கேட்கிறார்.. தலையெழுத்து.. ஐயோ கொடுமையே.. உண்மையிலேயே முடியல.." என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications