வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... அதான் வந்தீங்களே.. ஏன் எதுவும் செய்யலை.. சீமான் பொளேர் கேள்வி

கூட்டணி வைக்காமல் அரசியல் கட்சிகள் தனித்து போட்டியிடலாமே என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Seeman Speech: வேலூரில் வெளுத்த வாங்கிய சீமான்- வீடியோ

    வேலூர்: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... என்கிறீர்கள். அதான் வந்தீங்களே... ஏன் எதுவும் செய்யலை?" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவித்ததில் இருந்தே பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. சீமான் பேச்சு என்றாலே சும்மாவே கூட்டம் கூடும்.

    அதுவும் இப்போது பிரச்சாரம் வேறு.. அதனால் எல்லா கட்சிகளையும் லெப்ட் அண்டு ரைட் வாங்கி கொண்டிருக்கிறார் சீமான். வேலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

    ஓட்டுக்கு காசு

    ஓட்டுக்கு காசு

    ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...ன்னு சொல்றீங்க.. அதான் வந்திட்டீங்க இல்லை.. ஏன் எதுவுமே செய்யவில்லை? ஓட்டுக்குக் காசு கொடுக்காமல், உங்கள் பிள்ளைகளைத் தேர்தலில் நிற்க வைத்து ஜெயிச்சு காட்டுறேன்னு அதை மட்டும் சொல்லுங்க பார்ப்போம்.

    கூட்டணி

    கூட்டணி

    எல்லா கட்சியும் ஆட்சி மாற்றம் குறித்து பேசுறாங்க. ஆனா எந்த கட்சியிடம் இருந்து ஆட்சி மாற்றம் வேண்டும் என்று சொல்றாங்களோ அவங்க கூடவே கூட்டணி வைச்சுக்குறாங்க. அப்பறம் எப்படி மாற்றத்தை அவங்களால் கொண்டு வர முடியும், அது ஏமாற்றத்திலதான் முடியும்.

    பண பலம் இருந்தால்தான் இன்று தேர்தல்களில் ஜெயிக்க முடியுமா?பண பலம் இருந்தால்தான் இன்று தேர்தல்களில் ஜெயிக்க முடியுமா?

    ஏன் கூட்டணி?

    ஏன் கூட்டணி?

    இந்த தலைவர்கள் எல்லாரும்தான் நல்லவங்களாச்சே... எல்லாரும் பெரிய கட்சிதானே.. நல்லாட்சியை தந்தோம்னு சொல்றவங்கதானே... அப்புறம் ஏன் தனியா தேர்தலை சந்திக்க மாட்டேங்கிறாங்க. இவங்களுக்கு எதுக்கு கூட்டணி?

    லஞ்சத்தின் தொடக்கம்

    லஞ்சத்தின் தொடக்கம்

    அவ்வளவு வேணாம்.. காசு குடுக்காம கூட்டத்தை கூட்ட சொல்லுங்க பார்க்கலாம். முதல்ல ஓட்டுக்கு காசு தராம ஓட்டை வாங்க சொல்லுங்க பாக்கலாம். இதுதான் ஊழல், லஞ்சத்தின் தொடக்கமே" என்று ஆவேசமான கேள்விகளுடன் அடுக்கி கொண்டே போனார்.

    இப்போதுதான் புரிகிறது.. இப்படி எல்லாரையும் பார்த்து கேள்விகளை கேட்க வேண்டும் என்றே சீமான் தனித்து போட்டியிட முடிவெடுத்திருப்பாரோ!

    English summary
    In Vellore Meeting, Seeman has accused the Dravidian Parties Cheating the TN people
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X