மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. வேலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதி!
வேலூர்: மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.. சென்னைக்கு வர அவர் ரயில் ஏற இருந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் வேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தற்போதுள்ள தமிழ்நாடு அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் துரைமுருகன். நீர்வளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகன், திமுக பொதுச் செயலாளராகவும் இருக்கிறார்.

இதற்கிடையே 86 வயதான மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் இன்று மாலை முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி நிறைவு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகனும் கலந்து கொள்ள இருந்தார். இதற்காகச் சென்னை ரயில் மூலம் செல்ல காட்பாடியில் வந்தே பாரத் ரயிலில் ஏற முயன்ற போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முழுமையாக உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அமைச்சர் துரைமுருகன் இப்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார். இதையடுத்து விரைவில் அவர் சென்னைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
86 வயதான துரைமுருகன் அவ்வப்போது உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். அவருக்கு இரு ஆண்டுகளுக்கு முன் தான் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்வதை அவர் வழக்கமாகவே வைத்துள்ளார். சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு கூட அவர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
பள்ளிக் கல்வி துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா?











Click it and Unblock the Notifications