"ராத்திரியெல்லாம் தூங்கல.. மாமியார் கவிதா தான் காரணம்".. புது மாப்பிள்ளையின் மரண வாக்குமூல வீடியோ

புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: "ராத்திரி எல்லாம் நான் தூங்கல.. சூசைட் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. என்னை செத்து போக சொன்னது, என் வொஃய்ப் அர்ச்சனா, மாமியார் கவிதாவும்தான்.. என் மனைவியை என்கிட்டயிருந்து பிரிச்சதும் மாமியார் கவிதாதான்" என்று புதுமாப்பிள்ளை ஒருவர் தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட மரண வாக்குமூலம் போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

வேலூர் அடுத்த கீழ்மொணவூர் அம்மன் நகரை சேர்ந்தவர் அஜய்குமார்... 30 வயதாகிறது... அர்ச்சனா என்ற பெண்ணை இவர் காதலித்தார்.. இருவரும் கடந்த மே மாசம் 8-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி ரகசிமாய கல்யாணம் செய்து கொண்டனர்.

 shocking video: newly married person committed suicide near vellore

கீழ்மொணவூர் என்ற பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வாழ்க்கையை ஆரம்பித்தனர்.. கல்யாணம் ஆன 3வது நாளே அர்ச்சனா மீது அஜய்குமாருக்கு சந்தேகம் ஆரம்பித்தது.. இதனால் தினமும் தகராறு நடந்து வந்தது.. சமீபத்தில் அர்ச்சனாவுக்கு கர்ப்பப்பையில் ஒரு ஆபரேஷன் நடந்தது.. அதனால் ஓய்வெடுக்க அம்மா வீட்டுக்கு செல்வதாக சொல்லி அங்கு சென்றார்.

அடுத்த சில தினங்களில் அஜய்குமார் அங்கு சென்று வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.. ஆனால் அர்ச்சனா வர மறுத்ததாக தெரிகிறது.. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அஜய்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. தற்கொலைக்கு முன்பு ஒரு வீடியோவையும் பதிவிட்டு, அதை தன் சொந்தக்காரர்களுக்கு அனுப்பியுள்ளார்.

 shocking video: newly married person committed suicide near vellore

அந்த வீடியோவை பார்த்துவிட்டு பதறிப்போன உறவினர்கள், வீட்டுக்கு ஓடினார்கள்.. ஆனால், அதற்குள் அஜய்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .. இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. மரண வாக்குமூலம் போன்ற இருந்த அந்த வீடியோவில் அஜய்குமார் சொன்ன தகவல் இதுதான்:

நாங்க 2 பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. அது உங்களுக்கு தெரியும்.. 2 மாசமா நல்லா வாழ்ந்துட்டு , இப்போ என் கிட்ட கோபமா பேசறா.. அவங்க அம்மா வீட்டுக்கு போனதில் இருந்தே என்னை எளக்காரமா பேசறா.. வா நம்ம வீட்டுக்கு போலாம்னு கூப்பிட்டா, என் அம்மா சொல்றதைதான் கேப்பேன்னு சொல்லிவிட்டாள்.

 shocking video: newly married person committed suicide near vellore

ணை இழுத்துட்டு போறியா"ன்னு என்னை அசிங்கமா பேசிட்டார். அவ இல்லைன்னா செத்து போய்டுவேன்னு சொன்னேன்.. செத்து போன்னு என்னை சொல்லிட்டாங்க.. நான் கிளம்பி வந்துட்டேன்.. ராத்திரி எல்லாம் நான் தூங்கல.. நான் சூசைட் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. என்னை செத்து போக சொன்னது, என் வொஃய்ப் அர்ச்சனா, மாமியார் கவிதாவும்தான்..

இதுக்கு அவங்க தான் முழு காரணம்... நான் சொன்னால் நம்ப மாட்டீங்க, மேல பாருங்க... ஃபேனில் தூக்கு ரெடியா கட்டி வெச்சிருக்கேன்.. என்னால தினம் தினம் அசிங்கப்பட்டு வாழ முடியாது.. ஒரேடியா செத்து போயிடறேன்.. எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க" என்று அழுது கொண்டே இருக்கிறார்... அத்துடன் அந்த வீடியோ முடிகிறது.

இந்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கல்யாணம் ஆன 2 மாதங்களிலேயே புது மாப்பிள்ளை தூக்கில் தொங்கிய சம்பவமும், இந்த மரண வீடியோ வாக்குமூலமும் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+