Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பார்க்கவே சிலிர்க்குதே.. அசத்திய பேர்ணாம்பட்டு "மசிகம்".. மீண்டும் உயிரூட்டிய வேலூர் கிராம சபை..மாஸ்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஒரு முக்கிய சம்பவம் நடந்துள்ளது.. இது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் ஆச்சரியத்தை தந்து வருகிறது. என்ன நடந்தது?

தமிழக காவல்துறையை பொறுத்தவரை, கள்ளச்சாராயம், மதுபோதை, கஞ்சா உள்ளிட்டவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மிக தீவிரமாக கையாண்டு வருகிறது. அந்தவகையில், வேலூர் மாவட்டத்திலும் இதற்கான சாட்டையை சுழட்டி வருகிறது.

Super incident in Peranampattu Gram Sabha and Major announcement about sale, consumption of liquor Vellore Districts

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

போலீசார்: கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட, மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் சுமார் 10 லிட்டர் கள்ளச்சாராயம், 102 மதுபாட்டில்கள், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 150 கிலோ வெள்ளம் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.. மொத்தம் 18 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

எனினும் சில இடங்களில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருவதாக தெரிகிறது.. பள்ளிகொண்டா பகுதியிலும், இந்த நிலைமை நீடிப்பதாக தெரிகிறது. அத்துடன் கந்தனேரி பகுதியில், 130 ரூபாய்க்கு விற்க வேண்டிய மது பாட்டிலை, கூடுதல் விலைக்கு விற்றதாக பலமுறை புகார்களும் எழுந்துள்ளளன..

அணைக்காடு: அதேபோல, அணைக்காடு பகுதியில், என் கணவர் கள்ளச்சாராயம் குடிச்சே செத்துப்போயிட்டார் என்று கூலித் தொழிலாளியின் மனைவி போலீஸில் அளித்திருந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், ஒரு ஆறுதல் செய்தி இதே வேலூர் மாவட்டத்திலிருந்து வெளிவந்துள்ளது.. பேரணாம்பட்டு அடுத்துள்ள மசிகம் ஊராட்சி.. இந்த ஊராட்சியை சுற்றிலும் கிட்டத்தட் 9-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 1500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகிறார்கள்..

கள்ளச்சாராயம்: இந்த மசிகம் கிராமமானது, பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டியுள்ளது.. இந்த கிராமத்தின் காப்புக்காட்டில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அமோகமாக நடந்து வந்துள்ளது.. அதாவது, சாராயத்திற்கு புகழ்பெற்ற கிராமமாக இது விளங்கி உள்ளது.. மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை என்றாலே, போலீசார் முதலில் இந்த கிராமத்துக்கு வந்துதான், சோதனையை மேற்கொள்வார்களாம்.. அடிக்கடி இந்த கிராமத்தை சுற்றியே ரோந்துகளையும் மேற்கொண்டு வந்துள்ளனர்.

அந்த அளவுக்கு கள்ளச்சாராயம் இந்த கிராமத்தில் தலைவிரித்தாடியிருக்கிறது.. இந்த சாராயத்தை வாங்குவதற்காக, புதுமுகங்கள் நிறைய பேர், இந்த கிராமத்தை தேடி வருவார்களாம்.

அறிமுகம்: இப்படி, சாராயத்தை வாங்குவதற்கும், அங்கேயே உட்கார்ந்து குடிப்பதற்கும், அறிமுகம் இல்லாத நபர்கள் அதிகளவில் வந்து, செல்வதால் அந்த பகுதி பள்ளி மாணவர்கள், பெண்கள் என அனைவரும் கடுமையான அவதிக்குள்ளாகி வந்தனர். அதனால், மசிகம் கிராம மக்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தனர்..

அதன்படி, மசிகம் ஊராட்சியில் கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்த துவங்கினர். இதையடுத்து, மசிகம் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் கள்ளச்சாராயத்தை ஒழிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.. அத்துடன், கிராம சபை கூட்டத்திலும் இதற்காகவே, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில், போலீசார் உதவியுடன் இந்த ஊராட்சியில் சாராயம் விற்பனை செய்து வந்த நபர்கள் மொத்த பேரையும் கைது செய்தனர்..

கள்ளச்சாராயம்: இந்த மசியம் கிராமத்தில் கள்ளச்சாராயமே கிடையாது.. முழுமையாக சாராயம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அங்கிருக்கும் பஸ் ஸ்டாண்டில், கிராம மக்கள் ஒன்றிணைந்து அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டார்கள். மசிகம் ஊராட்சியில் சாராயம் குடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது..

இதை மீறும் நபர்கள் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்..

சபாஷ் மக்கள்: சாராயம் இல்லாத கிராமமாக மசியம் இன்று கெத்து காட்டுகிறது.. இந்த மாற்றம், பலரையும் கவனிக்க செய்து வருகிறது.. நம்முடைய தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும், இப்படியான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டால், மதுவிலக்கு தானாகவே அமலாகிவிடும்...

அதுமட்டுமல்ல, வேலூர் மாவட்டத்தில் எங்கோ ஒரு இடத்தில் உள்ள மசியம் என்ற கிராம மக்கள், கிராம சபைகளுக்கு இன்னும் உயிர்ப்பு இருக்கிறது என்பதை இந்த தமிழகத்துக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.. சபாஷ் மக்களே..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+