Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர் சிஎம்சி விரைந்த முதல்வர் ஸ்டாலின்.. துரை தயாநிதி அழகிரியின் உடல் நலம் குறித்து விசாரிப்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதி அழகிரியிடம், அவரது சித்தப்பாவும், தமிழக முதல்வருமான் ஸ்டாலின் இன்று நலம் விசாரித்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான துரை தயாநிதி அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் ஆவார்.. இவரது சித்தப்பா முக ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக உள்ளார். துரை தயாநிதி அழகிரி சென்னை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் வசித்துவந்தார்.

Tamil Nadu Chief Minister MK Stalin inquired about the health of Durai Dayanidhi Alagiri in vellore

கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி துரை தயாநிதி அழகிரி திடீரென வீட்டில் மயங்கி சரிந்து விழுந்துள்ளார் இதையடுத்து அவரது வீட்டிலிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதை உறுதி செய்தனர்.

அதனை தொடர்ந்து, உடனடியாக அறுவை சிகிச்சையைத் தொடங்கினார்கள். சுமார் ஆறு மணி நேரத்துக்கும் மேல் அறுவை கிசிச்சை செய்து அடைப்புகளை நீக்கினார்கள். அதன்பின்னர் பொதுவார்டுக்கு மாற்றினார்கள். இதனிடையே மகனின் உடல் நலம் குறித்து அறிந்த உடன் முன்னாள் அமைச்சர் அழகிரியும், அவரின் மனைவியும் டிசம்பர் 7ஆம் தேதிதான் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தனர்.

இதேபோல் துரை தயாநிதியின் உடல் நிலை குறித்து கேள்விப்பட்டு முதல்வர் ஸ்டாலின் அப்போதே சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி அழகிரியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்ததுடன், சிகிச்சைகள் பற்றியும் கேட்டறிந்தார்.

இதனிடையே சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி அழகிரி, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் துரை தயாநிதி அழகிரி கிசிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு உயர்ரக கிசிச்சை மற்றும் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனிடையே இன்று வேலூர் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், சிஎம்சி மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு கிசிச்சை பெற்று வரும் தயாநிதி அழகிரியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் என்னென்ன மருத்துவ முறைகளில் கிசிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்தும், உடல் நலம் குறித்தும் மூத்த மருத்துவர்களிடம் விசாரித்தார்.

துரை தயாநிதி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அனுஷாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு ருத்ர தேவ் மற்றும் வேதாந்த் என இரண்டு மகன்கள் உள்ளனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+