கிருபானந்த வாரியாரின் பிறந்தநாள்.. தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை! ஏராளமானோர் பங்கேற்பு
வேலூர்: ஆன்மீக சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த நாள் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது பிறந்த நாளையொட்டி, வேலூர் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அவரது நினைவிடத்தி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் 1906 ஆகஸ்ட் 25 அன்று மல்லைய தாசருக்கும், ஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகனாக கிருபானந்த வாரியார் பிறந்தார்.

இவர் ஆன்மீக சொற்பொழிவாளராகவும் மற்றும் முருக பக்தராக இருந்து பல இடங்களில் கோவில்களை நிறுவினார்.மேலும் தமிழ் மொழிக்கும்,தமிழ் இலக்கியத்திற்கும் பல தொண்டுகளை ஆற்றியவர்.இ தன் காரணமாக இவரின் பிறந்த நாளை ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன் அடிப்படையில் காங்கேயநல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தின் ஆலயத்தில் கிருபானந்தவாரியார், பிறந்த நாளை முன்னிட்டுஇன்று அரசின் சார்பில் அவரது திருவுருவ சிலைக்குமாவட்ட ஆட்சித் தலைவர் லீலா அலெக்ஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, மாமன்ற உறுப்பினர் அதிமுகவை சேர்ந்த ரமேஷ் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள் , பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
முன்னதாக செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை ஆட்சியர் லீலா அலெக்ஸ் துவக்கி வைத்து பார்வையிட்டனர். மக்களுக்கு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
