ஆட்சிக்கு வந்ததும் முதல்வேலை இதுதான்.. செக் வைக்க முடிவு செய்த ஸ்டாலின்.. வேலூரில் சவால்!
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து குற்றவாளிகளை சிறையில் தள்ளுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
வேலூர்: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து குற்றவாளிகளை சிறையில் தள்ளுவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
வேலூர் பிரச்சார களம் தற்போது சூடு பிடித்துள்ளது. நாளையோடு அங்கு பிரச்சாரம் முடிகிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றார். கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வேலூரில் பிரச்சாரம் செய்தார்.

என்ன சொன்னார்
திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேச்சில், திமுக வெற்றி பெற்றால் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் திட்டத்தை விரிவுப்படுத்த அழுத்தம் தரப்படும். நீர் மேலாண்மையில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு அதிமுகதான் காரணம்.

நாங்கள்தான்
வேலூர் மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை திமுக தான் கொண்டுவந்தது. ஆனால் அதிமுக அப்படி திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. ஏன் இருக்கும் திட்டத்தை விரிவுபடுத்தாமல் கிடப்பில் போட்டது அதிமுக அரசு. அதுதான் தற்போது வேலூர் தண்ணீர் பிரச்சனைக்கும் காரணம்.

சவால்
அப்துல்கலாமை கருணாநிதி விமர்சித்ததாக ஓபிஎஸ் கூறுகிறார், அதை நிரூபிக்க தயாரா?. டாக்டர் கலாம், குடியரசு தலைவராக திமுகவே காரணம். அது அரசியல் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். திமுக தலைவர்கள் கலாமுடன் நல்ல முறையில் பழகி வந்தனர். ஓ. பன்னீர் செல்வம் பொய்யாக குற்றச்சாட்டி உள்ளார்.

அட முடியுமா
நான் மண்டபத்தில் பிரசாரம் செய்ததால் அந்த மண்டபத்திற்கு சீல் வைத்தனர், சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா. ஆட்சி கவிழ்வதை யாராலும் தடுக்க முடியாது. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து குற்றவாளிகளை சிறையில் தள்ளுவோம். பதவி ஏற்றதும் திமுகவின் முதல்வேலை இதுதான் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications