திருப்பத்தூரில் ரூ.35க்கு வெங்காயம்.. சந்தோஷமாக ரேஷன் கடைக்கு போன மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்திலும் வெங்காயம் விவகாரம் வெடித்துள்ளது.. வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ ரூ.60 வரை சென்ற நிலையில், ரேஷன் கடையில் ரூ.35க்கு வெங்காயம் கிடைக்கிறது என்ற செய்தி ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கொஞ்சம் நிம்மதியை கொடுத்தது. ஆனால், அந்த நிம்மதியுடன் ரேஷன் கடைக்கு சென்ற சிலருக்கு, அதிருப்தியும், ஏமாற்றமும் கிடைத்துள்ளது.. இந்த புகார் இப்போது திருப்பத்தூரில் எழுந்துள்ளது.

பல மாதங்களாகவே வெங்காயம் விலை பலரையும் கதற வைத்து விட்டது.. போதாக்குறைக்கு ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை உயர்ந்ததால் போக்குவரத்து செலவும் அதிகரித்தது.

Tirupathur Ration Shops

அதே நேரத்தில், வெங்காய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வரத்து குறைந்ததால் வெளிச்சந்தையில் விலை ரூ.56 முதல் ரூ.60 வரை சென்றது. அதனால்தான் ரூ.35 க்கு வெங்காயம் விற்பனை திட்டம் கொண்டு வரப்பட்டது.

ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம்

இதையடுத்து, மக்களின் சுமையை குறைக்கும் வகையில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது.

நகர்ப்புறங்களில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதான விற்பனை பண்டகசாலைகள், அமுதம் அங்காடிகள் மற்றும் நியாயவிலை கடைகள் மூலம் கிலோ ரூ.35க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த செப்டம்பர் 3-ம் தேதி முதல் 8,739 ரேஷன் கடைகளில் சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, கார்டுக்கு ஒரு கிலோ என்ற அடிப்படையில் வெங்காயம் வழங்கப்பட்டு வருகிறது.

குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சி

அரசின் இந்த சூப்பரான நடவடிக்கைக்கு துவக்கத்திலேயே பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துவிட்டது.. ஏராளமானோர் நேரடியாகவே இதனால் பலன்பெற்று வருகிறார்கள்.. அதில் மாற்றுக்கருத்தில்லை.. ஆனாலும் ஆங்காங்கே சில நேரங்களில், சில அதிருப்திகள் தலைதூக்கி விடுகின்றன.. அப்படித்தான் திருப்பத்தூர் மாவட்டத்திலும் ஒரு புகார் வெடித்து கிளம்பியிருக்கிறது.

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி தெரு பகுதியில் நியாயவிலை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பொதுமக்கள் கோதுமை மற்றும் வெங்காயம் வாங்குவதற்காக சென்றிருக்கிறார்கள்.. அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வெங்காயங்களில் சில அழுகிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

திருப்பத்தூர் ரேஷன் கடை

வெங்காயத்தின் விலை ஏற்கனவே வெளிச்சந்தையில் அதிகரித்துள்ள நிலையில், அரசு குறைந்த விலையில் விற்பனை செய்யும் வெங்காயமும் இப்படி இருந்தால் எப்படி வாங்குவது? என்று அதிர்ந்து போய் நின்றுள்ளனர்.. இதனால் அங்கு வந்தவர்கள் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, அழுகிய நிலையில் இருந்த வெங்காயத்தையும் வாங்குமாறு ரேஷன் கடைக்காரர்கள் வற்புறுத்துகிறார்களாம். தரமில்லாத பொருளை ஏன் வாங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்..

வரும் நிலையில், திருப்பத்தூரில் எழுந்துள்ள இந்த புகார் கவனத்தை பெற்றுள்ளது. குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க வேண்டும் என்பதோடு, அது நல்ல தரத்திலும் இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. எனவே, அழுகிய வெங்காயங்களை உடனடியாக அகற்றி, தரமான வெங்காயம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+