கொன்னுடுங்க சார்.. திருப்பத்தூர் ஸ்பெஷல் தாசில்தார் டூ அரசு அதிகாரி விஜி! தலைகுனியும் ராமநாதபுரம்
வேலூர்: தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. சாதாரண சான்றிதழ்கள், வழக்கு தொடர்பான அறிக்கைகள், அலுவலக பணிகள் போன்றவற்றுக்கே லஞ்சம் கேட்கப்படும் நிலை தொடர்கிறது. தமிழகம் முழுவதும் லஞ்சம் தொடர்பாக பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.. இந்நிலையில், ராமநாதபுரத்தில் இருந்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2025 மார்ச் வரையிலான லஞ்ச ஒழிப்பு போலீசாரின் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டதில் வருவாய்த்துறை பெருத்த அதிர்ச்சியை தந்தது.

காரணம், லஞ்சம் வாங்கி கைதானவர்களில் முதலிடத்தில் இருப்பதே வருவாய்த்துறைதான். இதில் சர்வே துறையில் மட்டும், 29 பேர் உட்பட தாசில்தார் முதல் தலையாரி வரை 92 பேர் கைதாகியிருந்தனர். 2வது இடத்தில் மின்சார வாரியமும், 3வது இடத்தில் உள்ளாட்சி துறையும், அடுத்தபடியாக பத்திரப்பதிவு துறையும் என அந்த லஞ்சம் லிஸ்ட் அதிர வைத்தது. இதில், விஏஓக்களைவிட, தாசில்தார்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது
திருப்பத்தூர் ஸ்பெஷல் தாசில்தார்
ஆனாலும் இந்த எண்ணிக்கை குறையவில்லை.. அதிலும் பெண் அதிகாரிகளே லஞ்சம் வாங்கி பொதுவெளியில் கைதாகி அசிங்கப்படுவது, மிகுந்த கவலையை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில்கூட , திருப்பத்தூர் மாவட்டத்தில் வள்ளியம்மா என்ற வட்டாட்சியர் லஞ்சம் வாங்கி அசிங்கப்பட்டார்.. குடும்ப உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடைந்தால், அவர்களின் ஈமச்சடங்குகளை செய்வதற்காக அரசு ரூ.25 ஆயிரம் உதவித்தொகை வழங்குகிறது. இந்த தொகையை பெறுவதற்காக சம்பந்தப்பட்டவர்கள், நாட்றம்பள்ளி சமூக நல பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியரான வள்ளியம்மாளிடம் அணுகி உள்ளனர்.
அதற்கு வள்ளியம்மா ரூ.3,000 லஞ்சம் கேட்டாராம். இந்த புகாரில் வள்ளியம்மாள் கைதானார்.. அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, வள்ளியம்மா திடீரென நெஞ்சை பிடித்து கொண்டு மயங்கி விழுந்தாராம்.. அவரை உடனடியாக மருத்துவமனையில் அதிகாரிகள் அனுமதித்தபோது, என்னை கொன்னுடுங்க சார் என்று அழுதுகொண்டயிருந்தாராம் வள்ளியம்மா,
பாளையங்கோட்டை விஜி
அந்த சம்பவம் முடிந்த அடுத்த சில நாளிலேயே நெல்லை விஜி, நீதிமன்ற தண்டனைக்கு ஆளானார்.. திருநெல்வேலியில் தொடர்ந்து மணல் அள்ள வேண்டும் என்றால் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துவிட வேண்டும், இல்லாவிட்டால் ஏதாவது ஒரு சாக்கு சொல்லி கேஸ் போட்டுவிடுவேன்" என்று மிரட்டி உள்ளார் சீலவப்பேரி துணை தாசில்தார் விஜி.
இதையடுத்து, விஜிக்கு 3 வருடங்கள் சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சிறைத்தண்டனை பெற்றுள்ள விஜி, இப்போது நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருவது
அரசு அதிகாரிகள்
இந்நிலையில், தமிழகத்தில், லஞ்ச வழக்குகள் பதிவில், ராமநாதபுரம் மாவட்டம் தொடர்ந்து 2 வருடங்களாகவே முதலிடத்தில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியிருப்பது கவலையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது..
ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு, லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என்றாலும், ஒவ்வொரு ஆண்டும், லஞ்சம் பெறுவது குறித்த வழக்குகள் அதிகரித்து வருகின்றன..
மாநிலம் முழுதும் 2025ல் 391 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோல, 3 ஆண்டுகளில், 1,055 அரசு ஊழியர்கள் மீது லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ராமநாதபுரத்தில், 61 வழக்குகளும், கோவையில், 52 வழக்குகளும், மதுரையில், 44 வழக்குகளும் பதிவாகி உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில், 2025ல் மட்டும், 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 16 வழக்குகளில் பொதுமக்களிடம் நேரடியாக லஞ்சம் கேட்ட, 20 அரசு அலுவலர்கள், 2 புரோக்கர்கள் என, 22 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்.
கடந்த 2024ம் வருடத்தை எடுத்துக் கொண்டால் மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தில் இருந்தது. அதேபோல, 2025ம் ஆண்டிலும் முதலிடம் பிடித்துள்ளது, அம்மாவட்ட மக்களை தலைகுனிய வைத்துள்ளது... கோவை மாவட்டம், 24 வழக்குகளுடன், இரண்டாவது இடத்தில் உள்ளதாம்..
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications