மனைவியுடன் நிர்வாணமாக சுற்றி வந்த திருப்பத்தூர் கணவன்! மாட்டின் வாலை வெட்டி.. மக்கள் அலறி ஓட காரணம்?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: திருப்பத்தூர் அருகே, "என் மீது கருப்பன் சாமி இறங்கி இருக்கிறார்" என்று சொன்ன நபர், தனது மனைவியுடன் சேர்ந்து 4 நாட்களாக இரவு நேரங்களில் நிர்வாணமாக கிராமத்தில் சுற்றி பூஜை செய்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கிராம மக்கள் செய்த அதிரடியும், இது தொடர்பான போட்டோ, வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு அருகிலுள்ளது கரம்பூர் ஏரிக்கரை.. இங்கு வசித்து வருபவர் 52 வயது பழனி.. இவரது மனைவி பெயர் தீபா. இவர்கள் 2 பேரும் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் நிர்வாணமாக கிராமத்தில் சுற்றி வந்து வினோதமான முறையில் பூஜை செய்ததாக கூறப்படுகிறது.

Tirupattur News Naked Ritual Incident Cow Tail Cutting Case

திருப்பத்தூர் தம்பதி

இதனை பார்த்த கிராம மக்கள், இந்த தம்பதியை அழைத்து இதுகுறித்து கேட்டிருக்கிறார்கள்.. அதற்கு பழனி, "என் மீது கருப்பன் சாமி இறங்கி இருக்கிறது. அதனால் இதுபோன்ற பூஜைகளை செய்து வருகிறேன். எனது மனைவியும் என்னுடன் வருவார்.. இதை பற்றி யாராவது கேள்வி கேட்டால், அவர்கள் தடம் தெரியாமல் அழிந்து போய்விடுவார்கள்" என்று பழனி மிரட்டினாராம்.. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனிடையே, நேற்று காலை பழனி தன்னுடைய வீட்டில் வளர்த்து வந்த மாட்டின் வாலை வெட்டியதாக கூறப்படுகிறது. பிறகு அந்த மாட்டின் வாலை வீட்டின் அருகே வைத்து, நிர்வாணமாக மாந்திரீக பூஜை செய்ததாகவும் தகவல் வெளியானது.

மாட்டின் வாலை வெட்டி

இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், உடனே பழனி வீட்டுக்கு சென்றார்கள்.. மாட்டின் வாலை வெட்டி இதுபோன்ற உக்கிரமான பூஜைகளை செய்யக்கூடாது என்று பழனியிடம் சொல்லியிருக்கிறார்கள்..

ஆனால், கிராம மக்களின் பேச்சை கேட்காமல் பழனி தொடர்ந்து பூஜை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த சிலர் பழனியை பிடித்து கை, கால்களை கட்டி, லுங்கியை அணிவித்திருக்கிறார்கள்..

ஆனாலும், பழனி தொடர்ந்து ஏதேதோ மந்திரங்களை சொல்லி கொண்டேயிருந்தாராம்.. இதை பார்த்து கிராம மக்களில் சிலர் பயந்து கொண்டு, அங்கிருந்து அலறியடித்து ஓடியிருக்கிறார்கள்.. மேலும், சிலர் இந்த சம்பவத்தை தங்களது செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

லைவ் வீடியோ போடுங்க

அந்த வீடியோவில், "என் நிர்வாண பூஜையை லைவ் வீடியோ போடுங்கள்" என்று பழனி, வீடியோ எடுத்தவர்களிடம் அட்ராசிட்டி செய்வது பதிவாகியுள்ளது..

இதுகுறித்து தகவலறிந்த குருசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பழனியை மீட்டனர். பிறகு அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்...

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு பின்னால் மத நம்பிக்கை, மனநிலை சார்ந்த பிரச்சனை அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+