ஜோலார்பேட்டையில் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் "மாரி! அவனை தொட முடியாது சார்! ஆடிப்போன திருப்பத்தூர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: ரீல்ஸ் கலாச்சாரம் இளைஞர்கள் சிலரை பைத்தியமே பிடிக்க வைத்துவிடுகிறது எனலாம்.. ஆபத்தான முறையில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு, பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

இன்றைய இளைய தலைமுறையிடம் ரீல்ஸ் மோகம் தலைவிரித்தாடி கொண்டிருக்கிறது.. பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், மேம்பாலங்கள், உயரமான நீர்வீழ்ச்சிகள், கடல் பகுதிகள் என எந்த இடமாக இருந்தாலும்சரி, ரீல்ஸ் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விடுகிறார்கள்..

Tirupattur Jolarpettai Police Station

அதிலும், ஆபத்து நிறைந்த பகுதிகளில் ரீல்ஸ் எடுப்பதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.. இதுபோன்ற இடங்களில் ரீல்ஸ் எடுப்பதால், விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.. அதிலும் இளம் வயது மரணங்களை ஜீரணிக்கவே முடிவதில்லை..

ஆபத்தான ரீல்ஸ்கள்

இந்த ரீல்ஸ் மோகமானது, ரெயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள், தண்டவாளங்களில்கூட விரிவடைந்து செல்கிறது.. அவ்வளவு ஏன்? ரயில் வரும்நேரத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டு ரீல்ஸ் எடுத்து, சிலர் பீதியை கிளப்பி விடுகிறார்கள்.. அதனால்தான், ரீல்ஸ் பதிவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் 2 மாதங்களுக்கு முன்பு எச்சரித்திருந்தது.

அப்படியிருந்தும் 10 நாட்களுக்கு முன்பு, ரயிலுக்குள்ளேயே ஒருவர் பக்கெட்டில் தண்ணீர் வைத்து குளித்து ரீல்ஸ் எடுத்திருந்தார்.. 4 நாட்களுக்கு முன்பு, ஒரு பெண் மின்சார கெட்டிலில் மேகி நூடுல்ஸ் சமைத்து வீடியோ பதிவிட்டிருந்தார்.

Tirupattur Jolarpettai Police Station

திருப்பத்தூர் குமரன்

இதோ இப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது.. ஜோலார்பேட்டை அடுத்துள்ளது பால்நாங்குப்பம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் 21 வயது குமரன்..

இவர் ஸ்டைலீஷ் ரேசர் _108 என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.. அதில், ஒரு பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி, அதன் மீது பவுடரை கொட்டி வெடிமருந்து வைத்து வெடிக்க செய்திருக்கிறார்.. அது பெரிய குண்டு போல வெடிக்கிறது.. இதனை வீடியோவை எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்..

அவனை தொடக் கூட முடியாது சார்

அதுமட்டுமல்ல, "நம்மளால அவனை தொடக் கூட முடியாது சார்.. இந்த ஏரியாவுல அவன் தான் பெரிய கை" என்று மாரி படத்தில் போலீசார் பேசும் வசனத்தை, வீடியோவில் குமரன் பேசியிருக்கிறார்..

Tirupattur Jolarpettai Police Station

இதில் ஹைலைட் என்னவென்றால், ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் முன்னாடியே, இந்த ரீல்ஸ் வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளார். இது போலீசார் பேசும் டயலாக் என்பதால், ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகில் சென்று இந்த வீடியோவை எடுத்துள்ளார்.

அதிர்ச்சியில் இணையவாசிகள்

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பதவி இணையவாசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

Tirupattur Jolarpettai Police Station

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், ஆபத்தினை ஏற்படுத்தும் வகையிலும், வன்முறையை ஏற்படுத்தும் வகையிலும் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளவர்கள் மீது நடவடிக்க எடுக்க வேண்டும், இதுபோன்றவர்களை போலீசார் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இணையவாசிகள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

நம்மளால அவனை தொடக் கூட முடியாது சார்! இந்த ஏரியால அவன் தான் சார் பெரிய கை என்ற டயலாக்குடன் பெட்ரோல் குண்டு வைப்பது போல உலாவரும் இந்த வீடியோ மீது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+