2.50 கோடி வாக்குகள்.. 200 தொகுதிகள்.. திராவிட மாடல் 2.0.. ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்
திருப்பத்தூர்: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். திருப்பத்தூரில் நடந்த திமுக வாக்குச்சாவடி பயிற்சி மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒவ்வொரு பூத்திலும் 350 வாக்குகள் வீதம் மொத்தம் 2.50 கோடி வாக்குகள் பெற வேண்டும் என டார்கெட் கொடுத்துள்ளார் [Tiruppathur DMK Meeting].
திருப்பத்தூரில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பயிற்சி மாநாட்டில் பேசிய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பேசும்போது, "கருப்பு, சிவப்பு துண்டோடு உங்களை பார்க்கிறபோது என் உற்சாகம் டபுளாகிறது. மீண்டும் திமுக ஆட்சி தான் என்பது புரிகிறது. அடுத்தடுத்து மதுரை, கோவை பயிற்சி கூட்டங்களில் நம் எனர்ஜி கூடும். அதற்கு நான் கியாரன்டி.

கருப்பு சிவப்பு தான் டிரெண்ட்
இந்த ஏற்பாட்டில் அசத்தியுள்ள வடக்கு மண்டல பொறுப்பாளர், எதிலும் வல்லவர் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு வாழ்த்துகள். உங்களின் தன்னம்பிக்கையிலேயே வெற்றி தெரிகிறது. திருவண்ணாமலையில் 8 தொகுதிகள், வேலூர் 5 தொகுதிகள், தர்மபுரி 5 தொகுதிகள், கிருஷ்ணகிரி 6 தொகுதிகள் ராணிப்பேட்டை 4 தொகுதிகள், கள்ளக்குறிச்சி 4 தொகுதிகள், சேலம் 11 தொகுதிகள் என மொத்தம் 40 தொகுதிகளின் நிர்வாகிகள் இங்கு உள்ளனர்.
தமிழ்நாட்டில் கருப்பு சிவப்பு டிரெண்ட் தான்
2024 நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் பெற்றோம். அதைவிட அதிக திட்டங்களை இப்போது அறிவித்துள்ளோம். எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றியுள்ளோம். 2019 ஆம் ஆண்டில் இருந்து சாதாரணமாக இல்லாமல், சரித்திர வெற்றி பெற்றுள்ளோம். எதிரிகளை கலங்கடித்துள்ளோம். இந்தியாவில் எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டில் கருப்பு சிவப்பு டிரெண்ட் தான்.
2026 தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஏழாவது முறையாக ஆட்சியை பிடிக்கும். திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. நம்பிக்கையில் சொல்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதியும் திமுக கோட்டை என்பதை காட்ட வேண்டும். 2026 வெற்றியை சரித்திர ஆய்வாளர்கள் ஆய்வு செய்யுமளவுக்கு மகத்தான வெற்றி பெற வேண்டும்.
2.50 கோடி வாக்குகள் டார்கெட்
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 உறுப்பினர்களை நியமித்துள்ளோம். தமிழகத்தில் சுமார் 75,000 பூத்கள் உள்ளன. சராசரியாக ஒரு பூத்துக்கு 350 வாக்குகள் வாங்கினாலே மொத்தம் 2.50 கோடி வாக்குகளை வாங்கிவிடுவோம். ஒவ்வொருவரும் அவர்களுக்கு அஸைன் செய்துள்ள 50 வாக்குகளை பெற்றாலே டார்கெட்டை எட்டிவிடுவோம்.
சொன்னதையும் தாண்டி
200 தொகுதிகள் நிச்சயம் பெறுவோம். தேர்தலுக்கு முன்பு ஒருவரும் வாக்காளர்களை குறைந்தது 5 முறையாவது சந்திக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பரவினாலும் நேரடியாக சந்தித்து வாக்கு கேட்பது போல ஆகாது. 2021 தேர்தல் வாக்குறுதியில் சொன்னதையும் தாண்டி செய்துள்ளோம். அதனால் மக்கள் முன்பு கெத்தாக நிற்போம்.
திமுக பிராண்ட்
மக்களிடம் பணிவாக, கனிவாக, மரியாதையுடன் அணுக வேண்டும். வாக்களிப்பது வரை அவர்களிடம் வீடு வீடாக சென்று பேச வேண்டும். நண்பர்களுடன் டீக்கடையில் அமர்ந்து எப்படி பேசுவோமோ அப்படி நட்புடன் பேசுங்கள். வாக்கு இயந்திரம் எடுக்கும் வரை விழிப்புடன் இருங்கள். கடந்தமுறை பெற்றதை விட பெரிய வெற்றி நிச்சயம் சாத்தியம்.
திட்டங்களை லிஸ்ட் போட்ட ஸ்டாலின்
நான் முதல்வன், தமிழ் புதல்வன், லேப்டாப், மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், நம்மை காப்போம் 48, மகளிர் விடியல் பயணம், தோழி விடுதிகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களை சொல்லுங்கள். லிஸ்ட் எடுத்து காட்டுங்கள். இதற்கான புத்தகத்தை வழங்கியுள்ளோம். அடுத்த 2 மாதங்கள் எங்கு திரும்பினாலும் திமுக பிராண்ட் தான் தெரிய வேண்டும்" என்றார்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்












Click it and Unblock the Notifications