வெறும் ரூ.500 தானா? மலிவு விலையில் ஏலம் போன ஆடம்பர பைக்குகள்.. போலீசின் சூப்பர் சம்பவம்
வேலூர்: நம்பவே முடியாது உங்களால்.. ரூ.500க்கு கூட பைக்குகள் விலை போய் உள்ளன. மலிவு விலையில் ஆடம்பரமா பைக்குகள் ஏலம் போய் இருக்கின்றன. தமிழக போலீசார் நடத்திய இருசக்கர வாகனங்கள் ஏலம் குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.
வழக்கு சம்பந்தமாகவும், விபத்து சம்பந்தமாகவும் பல்லாண்டுகளாக துருப்பிடித்து கிடந்த பைக்குகளை ஆயிரம், இரண்டாயிரம் என கூவி கூவி பைக்குகளை போலீசார் ஏலம் விட்டனர். 16500 ஒரு தரம், 16500 இரண்டு தரம் என ஒவ்வொரு பைக்காக ஏலம் விட்டனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

பழைய இரும்பு கடைக்கு போடப்படும் நிலையில் இருந்த பல பைக்குகளை வித் ஜிஎஸ்டி உடன் போலீசார் விற்றதால் வாகன ஓட்டிகள் திகைத்து போனார்கள்.
வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டு அரங்கில் மது விலக்கு மற்றும் எல்அண்டுஓ காவல்துறையினர் மூலமாக பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது. இதில் 450க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த ஏலம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களில் நல்ல கண்டிசனில் உள்ள பைக்குகளை பார்த்து ஆர்வத்துடன், அதனை எப்படியாவது ஏலத்தில் எடுத்துவிட வேண்டும் என்று என அமர்ந்திருந்தனர்.
பல இரு சக்கர வாகனங்களை 1000 , 1300, 2000, 3000 என ஏலம் விட்டு விற்று தீர்த்தனர் வேலூர் போலீசார். நல்ல கண்டிசனில் இருக்கின்ற பல்சர் 150 பைக் விற்ற போது, அதனை சுமார் 11500 வரை ஏலம் கேட்டு வாங்கினர். ஏலம் முடிந்து பைக்குகளை வாங்க சென்ற போது, வித் ஜிஎஸ்டி உடன் கட்டி வாகனத்தை எடுத்து செல்லுங்கள் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

இதை கேட்டு வாகன ஓட்டிகள் சற்று வருத்தம் அடைந்தாலும்,இவ்வளவு குறைவான விலையில் வாகனங்கள் கிடைக்காதே என்று வாகன ஓட்டிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தது காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட 260 இருசக்கர வாகனங்கள், சென்னை, புதுப்பேட்டை, சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த ஜூன் மாத இறுதியில் ஏலம் விடப்பட்டது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜூன் மாத இறுதியில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.












Click it and Unblock the Notifications