தினகரனுக்கு எந்தத் தகுதியும் இல்லை.. மீறினால் வழக்கு தான்.. எச்சரிக்கும் கே.பி.முனுசாமி!
வேலூர்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அதிமுகவைப் பற்றியும், எங்களைப் பற்றியும் பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தில் இருக்கும் சூழலில், வரும் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுக்குழுவை நடத்தும் விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேலூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி, வரும் 11ம் தேதி, ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில், உறுதியாக நடைபெறும். அதன்பின்னர், கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி உறுதியாக வருவார். அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு ஏற்கெனவே அனுமதி வழங்கிவிட்டதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். பொதுக்குழுக்கூட்டம் நடத்துவதற்கு தடை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, பொதுக்குழு ஆன்லைன் வழியாக இல்லாமல், நேரடியாகவே நடைபெறும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது விரக்தியின் எல்லையில் வைத்திலிங்கம் இருக்கிறார். அதேபோல் டிடிவி தினகரனும் பேசியிருக்கிறார். அவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். இவர்கள் எல்லாம் அதிமுகவில், தொண்டர்களாக இருந்தவர்கள். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளனர். அதிமுக ஆட்சியிலும் பொறுப்பு வகித்தவர்கள். இப்படி வந்த இவர்கள், ஒரு கட்சி தொண்டன் மீது இவ்வளவு பெரிய அபாண்டமான குற்றச்சாட்டை பதிவு செய்வது மிகவும் வேதனையாக இருக்கிறது.
அதிலும் வைத்திலிங்கம் கூறும்போது மிகமிக வேதனையாக இருக்கிறது. நேற்றுவரை அவர் இந்த கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர். அவரோடு நாங்கள் பயணித்தவர்கள். அவ்வாறு பயணித்த எங்களை, இதுபோல குற்றம் சாட்டுவதை அவருடைய மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.
டிடிவி தினகரன் சேலத்தில் 25 லட்சத்தில் இருந்து 5 கோடி வரை கொடுத்துள்ளதாக பேசியிருக்கிறார்.
இதுபோல் மீண்டும் ஒருமுறை அவர் பேசினால், நிச்சயமாக நீதிமன்றத்தில் நிற்க கூடிய நிலை அவருக்கு வந்துவிடும். அவர் இந்த கட்சிக்காக எந்த தியாகமும் செய்யாதவர். இந்தக் கட்சியால் பலன் அடைந்தவர். சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர். அவரெல்லாம் எங்களைப் பற்றி பேச எந்தவிதமான தகுதியும் இல்லாதவர். எனவே, இவர் இதுபோன்ற கருத்துகளை மீண்டும் கூறினால், அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.
-
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications