வாணியம்பாடியில் கோழியை விழுங்கிய 10 அடி மலைப்பாம்பு.. டக்னு அந்த பாம்பை காணோம்! திடுக் திருப்பத்தூர்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, கோழியை பிடித்து விழுங்கிக் கொண்டிருந்த சுமார் 10 அடி நீள மலைப்பாம்பை பார்த்து மக்கள் விரட்ட முயன்றபோது, விழுங்கிய கோழியை அப்படியே விட்டுவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மலைப்பாம்பு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்த நிலையில், அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பாம்புகள் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது எலி, தவளை போன்ற இரைகள்தான். ஆனால், பாம்புகளின் உணவு இத்துடன் முடிந்துவிடுவதில்லை. சில வகை பாம்புகள் பறவைகள், முட்டைகள் உள்ளிட்ட குட்டி குட்டி உயிரினங்களையும் சாப்பிடுகின்றன.

Vaniyambadi Python

கோழிகளை விழுங்கும் பாம்பு

அதிலும் மலைப்பாம்புகள் தங்களால் பிடிக்க முடிந்த அளவிலான உயிரினங்களை மொத்தமாக விழுங்கும் தன்மை கொண்டவை... அதில் கோழிகளும் இரையாக மாறிவிடுகின்றன. கோழி எளிதில் பிடிக்கக்கூடிய இரையாக இருப்பதுடன், அதன் உடலில் போதுமான இறைச்சி இருப்பதால் மலைப்பாம்புக்கு நல்ல உணவாகவும் அமைகிறது. பாம்புகளால் உணவை மென்று சாப்பிட முடியாது என்பதால், இரையை அப்படியே முழுவதுமாக விழுங்கிவிடுகின்றன.

10 அடி மலைப்பாம்பு

அப்படித்தான் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயும் ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது... திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை, ஜெட் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராணி... இவருடைய கணவர் விஸ்வநாதன் சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் இறந்து விட்டார்.. இதனால் ஜெயராணி தனது பிள்ளைகளுடன் கூலி வேலை செய்தும், வீட்டில் கோழி வளர்த்து பிழைப்பை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கோழி வீட்டின் அருகிலுள்ள கானாற்று பகுதியில் மேய்ச்சலில் இருந்தபோது அங்கு வந்த 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கோழியை பிடித்து விழுங்கி கொண்டிருந்துள்ளது.. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், மலைப்பாம்பை விரட்ட முயன்றுள்ளனர்..

உடனே அந்த மலைப்பாம்பு விழுங்கிய கோழியை விட்டு விட்டு, அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றுள்ளது.. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டார்கள்..

வனத்துறைக்கு கோரிக்கை

இந்த வீடியோவை பார்த்து, அந்த பகுதி மக்கள் ஆடிப்போய்விட்டார்கள்.. அப்படியானால், அந்த மலைப்பாம்பு தங்களது பகுதிக்குள்தான், புகுந்துவிட்டதையறிந்து பதறிப்போனார்கள்.. உடனே அந்த பகுதி முழுவதும் சல்லடைபோட்டு தேடிப்பார்த்தார்கள்.. ஆனால் மலைப்பாம்பு கிடைக்கவேயில்லை.. இதனால் இன்னமும் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளார்களாம்..

மலைப்பாம்பு மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளை இரையாக்கிவிடுமோ என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த எப்படியாவது அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் தேடிப் பிடித்து பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+