குடியாத்தம் கிணற்றில் மிதந்த உருவம்.. அரை கிலோ மீட்டருக்கு எப்படி? வேலூர் குழந்தை வழக்கில் விசாரணை
வேலூர்: வேலூரில் மாயமான குழந்தை, பாழடைந்த கிணற்றில் மீட்கப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணை உச்சக்கட்ட தீவிரம் பெற்றுள்ளது.. குழந்தையின் சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், குழந்தை எப்படி கிணற்றுக்குள் விழுந்தது? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த தம்பதி தரணி - பிரியா.. இவர்களது 3 வயது பெண் குழந்தை ஜெயப்பிரியா கடந்த 28-ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போயிருக்கிறாள்.. இதனால் பதறிப்போன பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், குடியாத்தம் தாலுகா போலீஸில் புகார் தந்தனர்.

திடீர் மாயம்: இதையடுத்து, காணாமல் போன குழந்தை ஜெயப்பிரியா வீட்டின் அருகேயிருந்த பாழடைந்த கிணற்றில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ந்தனர்.. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் தாலுகா காவல் துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு குழந்தையின் உடலை மீட்டனர். குழந்தையின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்..
தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. குழந்தை காணாமல் போனதாக புகார் வந்ததுமே, எஸ்.பி. மதிவாணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடும் நடவடிக்கை ஆரம்பமானது. ஆனால், 3 நாட்களாகவே தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.. இதற்காக மோப்ப நாய் சாரா வரவழைக்கப்பட்டது. அப்போதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
பாழடைந்த கிணறு: பிறகு தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியிலிருந்த கிணறுகளில் தேட துவங்கினார்கள்.. இதற்காக அந்த கிணறுகளிலிருந்து தண்ணீரை வெளியேற்றி, அவைகளிலும் குழந்தையை தேடும் பணி நடந்தது. அதற்கு பிறகே, குழந்தை மீட்கப்பட்டுள்ளது.. ஆனால் அந்த கிணறு, இன்னொருவருக்கு சொந்தமானது.

குழந்தை காணாமல்போன இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த கிணறு.. இதற்குள் எட்டிப்பார்த்தபோதுதான், பாழடைந்த கிணற்றில் குழந்தையின் சடலம் மிதந்துகொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி குழந்தையின் உடலை போர்வை மூலம் கட்டி, சடலத்தை மேலே கொண்டுவந்தனர். பிறக உடனடியாக தடய அறிவியல் துறையினர் குழந்தையின் உடலை ஆய்வு செய்தனர்..
சந்தேகம்: இரண்டரை வயது குழந்தை அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு எப்படி நடந்து சென்றிருக்க முடியும்? குழந்தை மாயமான அன்று அமாவாசை ஆகும்.. அதனால், இருட்டில் குழந்தையை யாரேனும் கடத்தி சென்றிருக்கலாம் என்கிற சந்தேகம் வலுக்க துவங்கியிருக்கிறது.. எனவே இந்த சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களும் வெளியாகலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications