வேலூர் ஏர்போர்ட்.. 300 ஏக்கர் நிலத்தில் சீறிப் பாயும் ரன்வே, வந்திறங்கிய விமானங்கள்.. டபுள் ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் விமான நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? என்பது வேலூர் மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது.. இதற்கு இப்போது அடுத்தடுத்து சில பதில்கள் கிடைத்து வருகின்றன. விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ஏர்போர்ட்டிலேயே முக்கியமான ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளன. அப்படி என்னதான் நடக்கிறது வேலூர் விமான நிலையத்தில்?

சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள புதிய விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குறைந்தபட்சம் 300 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ் உத்தரவிட்டிருந்தார்.

Vellore Airport

வேலூர் ஏர்போர்ட்

இதையடுத்து பொய்கை, அப்துல்லாபுரம், அன்பூண்டி, புதூர் ஆகிய 4 கிராமங்களில் நிலங்களை அடையாளம் காணும் பணி ஆரம்பமானது.. இந்தப் பகுதிகளில் உள்ள நிலங்களின் பத்திரங்கள், சர்வே எண்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. அதன் மூலம் அரசு நிலம் எது, தனியார் பட்டா நிலம் எது, அரசு புறம்போக்கு நிலம் எது என்று பிரிக்கப்பட உள்ளது.

அடுத்தகட்டமாக வருவாய்த்துறை அதிகாரிகள், சர்வேயர்கள் நேரடியாக ஸ்பாட்டுக்கு சென்று நிலங்களை அளவீடு செய்து வரைபடம் தயாரிக்க உள்ளனர். தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அதற்கான இழப்பீட்டுத் தொகையை கணக்கிடவும் இந்தப் பணிகள் உதவும்.

வேலூர் விமான நிலையம்

இப்போதுள்ள வேலூர் விமான நிலையம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 850 மீட்டர் நீள ரன்வே அதாவது ஓடுதளம், டாக்சிவே, தரைக்கட்டுப்பாட்டு உபகரணங்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம், முனையக் கட்டிடம், எரிபொருள் சேமிப்பு கிடங்கு போன்ற வசதிகள் உள்ளன.

முன்பெல்லாம் 8 சீட் கொண்ட குட்டி விமானங்களை மட்டுமே இயக்கும் அளவில் இருந்த இந்த விமானத் தளம், பிறகு 20 சீட்கள் கொண்ட விமானங்களை இயக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதன் மூலம் வேலூரில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு விமான இணைப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது. சிறிய நகரங்களை பெருநகரங்கள் மற்றும் 2ம் நிலை நகரங்களுடன் விமானப் போக்குவரத்து மூலம் இணைக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் உடான் திட்டத்தின் 2ம் கட்டத்திலும் வேலூர் விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

எல். முருகன் நம்பிக்கை

அதுமட்டுமல்லாமல், வேலூர் விமான நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கடந்த சில நாள்களுக்கு முன்புகூட நம்பிக்கை தெரிவித்திருந்தார்.. இப்படி, ஏர்போர்ட் பயன்பாட்டுக்கு வருவதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும்நிலையில், இதே வேலூர் விமான நிலையத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் தற்போது நடந்துள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த விமான பயிற்சி நிறுவனத்தின் 2-வது பயிற்சி விமானம் இப்போது வேலூர் விமான நிலையத்துக்கு வந்துள்ளது. ஏற்கெனவே கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஒரு பயிற்சி விமானம் வந்து சேர்ந்திருந்தது. மொத்தம் 3 பயிற்சி விமானங்கள் வர உள்ள நிலையில், 2 விமானங்கள் வந்துவிட்டன. இந்த விமானங்கள் 4 சீட்கள் கொண்டவை.

டபுள் ஜாக்பாட்

வேலூர் விமான நிலையத்தில் Aviation Academy என சொல்லக்கூடிய விமானப் பயிற்சி மையத்தை அமைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்காகத்தான் இந்தப் பயிற்சி விமானங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரே ஒரு விமானம் மட்டும் வர வேண்டியுள்ளது.

ஒருபுறம் விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் தொடர்பான பணிகள் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் பயிற்சி விமானங்களும் வந்து சேரத் தொடங்கியிருப்பது வேலூர் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பை டபுள் மடங்கு எகிற செய்துள்ளது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+