துக்க வீடுகள் மட்டுமே டார்கெட்.. வேலூரை அதிரவைத்த டிப்டாப் திருடன்
வேலூர்: திருட்டுகளில் பலவகை உண்டு. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் நடந்த ஒரு தொடர் திருட்டு பகீர் ரகம். டிப்டாப் உடையுடன் உலா வரும் ஆசாமி, துக்க வீடுகளை மட்டுமே குறிவைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. அவர் சிக்கியது எப்படி.
நம் சமூகத்தில் டிஸைன், டிஸைனாக ஏராளமான திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆன்லைன், ஆஃப்லைன் என்று பல ரூட்களில் திருடுவது வாடிக்கையாகி விட்டது. கோழி திருட்டு, சைக்கிள் திருட்டு, ஆடு திருட்டு, பல்பு திருட்டு என்று பல நூதன திருட்டு சம்பவங்கள் குறித்து கேள்விப்பட்டிருப்போம். அதையெல்லாம் மீறி, யாரும் எதிர்பாராத ஒரு நூதன திருட்டு சம்பவத்தால் வேலூர் மாவட்டமே அதிர்ந்து போயுள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில், ஒரு மர்ம ஆசாமி துக்க வீடுகளை மட்டுமே குறிவைத்து தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். குடியாத்தம், கோட்டை சுப்பையா தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் தாய் நீலாவதி அம்மாள் ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
அவரின் சடலம் அஞ்சலி செலுத்துவதற்காக சிறிது நேரம் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. சிறிதுநேரத்துக்கு பிறகு, மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மயானத்துக்கு தூக்கி சென்றுள்ளனர்.
அந்தநேரத்தில் அங்கிருந்த நபர் ஒருவர், வீட்டுக்குள் நுழைந்து திருட முயற்சித்தார். அவர் பீரோவை திறக்க முயற்சித்தபோது, அருகில் இருந்த பெண் பார்த்து கூச்சலிட்டுள்ளார். உடனடியாக சடலத்தை தூக்கி சென்ற ஆண்கள், திரும்பி வந்து அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் அங்கு வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
ஜீன்ஸ் பேன்ட், முழுக்கை சட்டை, ப்ளூடூத் உடன் டிப்டாப்பாக வலம் வந்த அந்த நபர், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முனிராஜ் என்பது தெரியவந்தது. கழுத்தில் வெள்ளி செயின், கையில் பிரேஸ்லைட், மோதிரத்துடன் உலாவிய அந்த நபரை உள்ளூரில் இருந்த யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், முனிராஜ் குடியாத்தத்தில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவரின் வீட்டுக்கு வந்துள்ளார்.
அவர் துக்க வீடுகளை குறிவைத்து தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கையும், களவுமாக பிடிபட்டு உறவினர்கள் அவரின் சட்டையை பிடித்து கேள்வி எழுப்பியபோது கூட அவர் அசரவில்லை. சம்பவ இடத்துக்கு காவல்துறை வந்து அவரிடம் விசாரணை நடத்தியபோதும் அசராமல் நின்றுள்ளார். உறவினர்கள் கூறுகையில், அந்த நபரை இதற்கு முன்பு யாரும் பார்த்ததில்லை.
அங்கும், இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார். இதுபோன்ற நேரங்களில் பலரும் இருப்பார்கள் என்பதால், அவரை யாரும் பொருட்படுத்தவில்லை. நாங்கள் சடலத்தை எடுத்து சென்ற சில நொடிகளிலேயே அவர் வீட்டுக்குள் நுழைந்து கைவரிசை காட்ட முயற்சித்தார். நாங்கள் அருகில் இருந்ததால், அவரை கையும், களவுமாக பிடித்துவிட்டோம். என்றனர்.
இதுகுறித்து குடியாத்தம் காவல்துறை கூறுகையில், முனிராஜ் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் துக்க வீடுகளுக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் செல்வார். துக்க வீட்டில் அங்கும், இங்கும் சுற்றி நோட்டமிடுவார். பிறகு சடலத்தை எடுத்து செல்லும் நேரத்தில், வீட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடுவார்.
முனிராஜ் மீது கர்நாடகாவில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறியுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications