Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் 1.63 லட்சம் கடன் வாங்கிய வங்கியிடமே.. 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வாங்க போகும் விவசாயி.. செம்ம

Subscribe to Oneindia Tamil

வேலூர் : வங்கியில் கடனை கட்டி முடித்த பின்னரும் நில ஆவணங்களை திருப்பி வழங்காததால் விவசாயிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு வேலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கியில் சொத்து பத்திரம் அல்லது நிலப்பத்திரங்களை வைத்து கடன் வாங்கியிருந்தால் இந்த செய்தியை முழுமையாக பாருங்கள். நிலம் அல்லது வீடு ஆகியவற்றை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கியவர்கள் முறையாக கடனை திருப்பி செலுத்தினால் பத்திரத்தை திரும்ப பெறலாம்.

Vellore farmer who is going to get compensation of 25 lakh rupees from the bank that took the loan

பெரும்பாலும் இதில் எந்த சிக்கலும் இருக்காது. அதேநேரம் சில வங்கிகள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி நில ஆவணங்கள் அல்லது வீட்டு பத்திரத்தை திரும்ப தராமல் உங்களை அலைகழித்தால் நீங்கள் வங்கி நிர்வாகத்திடம் முறையிடுங்கள். ஒருவேளை உங்களுக்கு தீர்வு கிடைக்காமல் போனால் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்.

கோர்டில் உங்களுக்கு நிச்சயம் சரியான நீதி கிடைக்கும். வங்கிகள் தவறு செய்திருந்தாலோ அல்லது அவர்களின் சேவை குறைபாட்டால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் வழக்கு போட்டு இழப்பீடு பெற முடியும். அப்படி இழப்பீடு பெற்றுள்ளார் திருவள்ளூர் மாவட்ட விவசாயி ஒருவர். வேலூரில் நடந்த வழக்கு பற்றி பார்ப்போம்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அதிமஞ்சேரிபேட்டையை சேர்ந்தவர் நீலகண்டசெட்டி என்பவர் விவசாயி ஆவார். இவர் விவசாயம் செய்வதற்கு போதிய பணம் இல்லாததால் 1992-ம் அண்டு வங்கியில் கடன் பெற முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி நீலகண்டசெட்டி தன் ஏரியாவிலேயே அமைந்துள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று ரூ.1 லட்சத்து 63 ஆயிரம் வேளாண் கடன் பெற்றார். இந்த கடன் பெறுவதற்காக அவர் நில ஆவணங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்திருக்கிறார். கடந்த 2006-ம் ஆண்டு அவர் சரியாக அசல் மற்றும் வட்டியை செலுத்தி தனது வங்கிக்கடனை கட்டி முடித்தார்.

இதையடுத்து நீலகண்டசெட்டி வங்கியில் நில ஆவணங்களை திரும்ப ஒப்படைக்குமாறு கேட்டிருக்கிறார். ஆனால் வங்கி நிர்வாகம் அவரது ஆவணங்களை திரும்ப வழங்காமல் தாமதப்படுத்தி வந்திருக்கிறது. இதனால் அவர் வங்கியின் சென்னை மண்டல மேலாளருக்கு கடிதம் மூலம் புகார் செய்திருக்கிறார். எனினும் அவரது ஆவணங்கள் ஒப்படைக்கப்படவில்லை.

இதன் பின்னர் அவர் சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை வேலூர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆ.மீனாட்சி சுந்தரம் அண்மையில் தீர்ப்பு வழங்கினார்.

அதில் நில ஆவணங்களை ஒப்படைக்காமல் தாமப்படுத்தியதால் வங்கியின் சேவை குறைபாடுக்காக ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி நீலகண்டசெட்டிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக கிளை மேலாளர், மண்டல மேலாளர், வங்கியின் மும்பை நகர இயக்குனர் ஆகியோர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். வங்கியில் கடனை கட்டி முடித்த பின்னரும் நில ஆவணங்களை திருப்பி வழங்காததால் விவசாயிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+