குடியாத்தத்தில் ஆடையின்றி கிடந்த ஆண் உடல்.. மனைவி பற்றி பேச்சு.. சிக்கிய நண்பர் திடுக் வாக்குமூலம்
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆடை இல்லாத நிலையில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் காந்திநகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் மாட்டு தீவனப்பயிர்களுக்கு நடுவே நிர்வாண நிலையில் உடல் ஒன்று கிடந்தது. அவர் யார் என்று விசாரித்த போது, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் மதுராம்பிகை நகரை சேர்ந்த ஹயாத்பாஷா (36) என்பது தெரியவந்தது.

கூலித் தொழிலாளியான ஹயாத் பாஷா கொல்லப்பட்ட நிலையில், இந்த வழக்கில் கள்ளூர் நேருநகரை சேர்ந்த பாப்ஜான் மகன் என்பவர் பாஷா என்பவர் வியாழக்கிழமை அன்று குடியாத்தம் சீவூர் கிராம நிர்வாக அலுவலர் ரகு முன்னிலையில் சரண் அடைந்தார். அவரை குடியாத்தம் டவுன் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது பாஷா அளித்த வாக்குமூலம் குறித்து தகவல்களை வெளியிட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஷா தன் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த இளைஞரை கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்றுள்ளளார். அந்த வழக்கிலிருந்து விடுதலை ஆன நிலையில், தன் மனைவியை பிரிந்து அம்மாவுடன் கள்ளூர் நேருநகரில் வசித்து வருகிறார்.
குடிப்பழக்கம் காரணமாக மதுராம்பிகை நகரை சேர்ந்த அஸ்கர் மகன் ஹையாத்பாஷா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர் போதையில் அடிக்கடி தனது மனைவியை அசிங்கமாக பேசுவாராம். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுடுகாட்டுக்கு அருகில் மது அருந்தியபோது தன் மனைவி மற்றும் தன் குடும்பத்தை தரக்குறைவாகவும், ஹையாத்பாஷா கேவலமாக பேசினாராம்.. இதனால் சண்டை ஏற்பட்டிருக்கிறது.
அதிலிருந்து கொஞ்ச நாள் இருவரும் சரியாக பேசாமல் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் ஹையாத்பாஷா , பாட்ஷாவின் மனைவி பற்றியும் அவரது குழந்தைகள் பற்றி ஊரில் போதையில் தவறாக பேசியிருக்கிறாராம். இதனால் ஆத்திரம் அடைந்த பாட்ஷா, தன் மனைவி, குடும்பம் பற்றி பேசக்கூடாது என்று சொன்னாராம். அதற்கு அப்படித்தான் பேசுவேன், உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்று சொல்லிவிட்டு ஹயாத்பாஷா சென்று விட்டாராம்.

இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்த பாட்ஷா, ஏற்கனவே சுல்தான் பாஷாவை கொலை செய்தது போல், 11-ந் தேதி இரவு மது குடிக்க அழைத்து காலால் எட்டி உதைத்தாராம். கீழே விழுந்ததும் தலையில் மிதித்துள்ளார். பின்னர் மயக்கம் அடைந்ததும் சட்டை, பனியன், லுங்கியை கழட்டி அருகில் போட்டுவிட்டு மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் தலைமீது தாக்கி கொலை செய்திருக்கிறார். பின்னர் திருச்சி பக்கம் சென்று விட்டாராம். பின்னர் செலவுக்கு தன் அம்மாவிடம் பணம் வாங்க வந்தபோது போலீசார் தன்னை தேடுவதை அறிந்து சரணடைந்துள்ளார்" இந்த வாக்குமூலத்தை அடுத்து பாட்ஷா மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட பாஷா கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் திருநகரை சேர்ந்த அப்சர் மகன் சுல்தான்பாஷா என்பவரை குடியாத்தம் சுண்ணாம்பேட்டையில் வைத்து கொன்றுள்ளளார். தன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு உள்ளதாக சந்தேகப்பட்டு அவரை கொன்ற நிலையில், அந்த வழக்கில் அண்மையில் இருந்து சிறையில் இருந்து வந்துள்ளார். தற்போது மறுபடியும் சிறைக்கு போய்விட்டார்.












Click it and Unblock the Notifications