வேலூர் கூட்டுறவு வங்கிகள், சங்கங்களுக்கு தனி செல்போன் நம்பர்.. கூடுதல் பதிவாளர் தந்த ஹேப்பி நியூஸ்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்ட மக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகின்றன... அந்தவகையில் தற்போதும் ஒரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது.. இதுகுறித்து கூட்டுறவுத் துறையின் கூடுதல் பதிவாளர் சீனிவாசன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இது கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.

கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தில், தமிழகம் முழுவதும் நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் இதற்கான பணிகள் கடந்த வருடமே துரிதமாகிவிட்டன.

Vellore cooperative banks societies

கலைஞரின் கனவு இல்லம்

அதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் 4000, திருப்பத்தூர் மாவட்டத்தில் 4000, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3073 என 4 மாவட்டங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 73 வீடுகள் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டது..

ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 3.5 லட்சம் ரூபாய் தொகை ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், பயனாளிகள் தங்களுடைய வீடுகளை தாங்களே கட்டிக்கொள்ள வேண்டும், அரசு சார்பில் இருந்து நிதி மட்டுமே ஒதுக்கப்படும்.. கூடுதலாக நிதி தேவை ஏற்படும் பட்சத்தில் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக 1 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்று கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகள்

அந்தவகையில் பயனாளிளுக்கு 9.50 முதல் 10 சதவீதம் வட்டியில் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், வீடுகட்டும் பணிகள் வேலூர் மாவட்டத்தில் ஜரூராகி கொண்டிருக்கிறது.

அதேபோல, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கியில் உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.. கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 41 பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் சென்றுள்ளன.

இப்படி கூட்டுறவு வங்கிகள், சங்கங்களுக்கான அதிரடிகள் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது ஒரு சர்ப்ரைஸ் செய்தி வெளியாகியிருக்கிறது.. அதாவது, கூட்டுறவு வங்கிகள், சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள வசதியாக தனி எண்கள் தரப்படும் என்று கூடுதல் பதிவாளர் உத்தரவிட்டிருக்கிறார்.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்

கூட்டுறவுத் துறையின் கூடுதல் பதிவாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் அனைத்து வகை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

அவை தங்களுக்குள் தொடர்பு கொள்ள வசதியாக பிரத்யேக குழு எண்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான பணியை மாநில கூட்டுறவு ஒன்றியமானது மேற்கொள்கிறது. புதிய எண்கள் வழங்குவதன் காரணமாக, ஒவ்வொரு கூட்டுறவு சங்கமும், வங்கியும் தங்களுக்கென பிரத்யேக ஆன்ட்ராய்டு கைப்பேசியைக் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.

பணி மாறுதல்

இந்த செல்போன் உரிமங்கள் புதுப்பிப்பு, பெறுவதற்கும் பயன்படுத்த வேண்டும். மேலும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் உபயோகிக்கலாம். செல்போனை கூட்டுறவு சங்கத்தின் முதன்மைச் செயல் அலுவலர் கையாள வேண்டும். பணி மாறுதல் மற்றும் ஓய்வின்போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

சங்கப் பணிகள் தொடர்பான குறுந்தகவல்கள் அனுப்புவதும், சங்கத்துக்கு வரும் தகவல்கள் மற்றும் உயர் அலுவலர்களிடம் இருந்து வரும் குறுந்தகவல்கள் அனைத்தும் பிரத்யேக செல்போன் எண்களிலேயே கிடைக்கும்படி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+