வேலூரில் பார்த்தீங்களா.. 5வது மனைவியின் ஆவேசம்.. ஓயாத உல்லாச அழைப்பு..துயரத்தில் சிக்கிய பரிதாப பெண்
வேலூர்: இளம்பெண் ஒருவர் கண்ணீருடன் வேலூர் போலீசில் புகார் தந்துள்ளார்.. அது தொடர்பான விசாரணையை போலீசார் கையில் எடுத்து வருகிறார்கள்.
வேலூர் எஸ்பி அலுவலகத்தில், மக்கள் குறைதீர்வு கூட்டம், வழக்கம்போல நேற்று நடைபெற்று கொண்டிருந்தது.. அப்போது, சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன் இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்..

இளம்பெண்: இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. அப்போது, ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் புகார் தந்தார். அவருக்கு 38 வயதாகிறது. அந்த புகாரில் உள்ளதாவது:
"எனக்கு, சென்னையை சேர்ந்தவருடன் 15 வருடங்களுக்கு முன்பு கல்யாணமானது.. 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.. என்னுடைய கணவர் 3 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். எனக்கு சிறிய வயது என்பதால், என்னுடைய அம்மா வீட்டில் இன்னொரு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தனர். இதில், மேட்ரிமோனி மூலம் திருப்பதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் அறிமுகமானார்.
பேங்க் மேனேஜர்: அவர் வேலூரில் உள்ள தனியார் வங்கியில் மேனேஜராக இருப்பதாக சொன்னார். அவருடன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் திருமணம் நடந்தது. பிறகு, அரியூரில் வசித்து வந்தோம்.
திருமணத்திற்கு பிறகு செலவுக்காக என்னிடம் ரூ.65 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை பெற்றுக்கொண்டார். இதுகுறித்து கேட்டால் சரிவர பதில் சொல்லவில்லை. சமீபத்தில்தான், என்னுடைய கணவருக்கு ஏற்கனவே 4 பெண்களுடன் கல்யாணம் நடந்திருப்பது தெரிந்து நானும், எனது மகளும் அதிர்ச்சியடைந்தோம். இதுகுறித்து கேட்டபோது, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுதொடர்பாக வேலூர் மகளிர் போலீசில் புகார் அளித்தேன்.. அதுகுறித்த விசாரணையில், எனது கணவர் மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
ஆபாச அழைப்புகள்: போலீசில் நான் அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று என்னுடைய கணவர் மிரட்டி வருகிறார். ஆனாலும் வாபஸ் பெற மறுத்ததால், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் என்னுடைய போட்டோக்களையும், என்னுடைய செல்போன் நம்பரையும் பதிவிட்டு வருகிறார்.
அத்துடன், என்னுடைய நடத்தையையும் இழிவுபடுத்தி பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்ததும் பலர் என்னிடம் ஆபாசமாக பேசியும், உல்லாசமாக இருக்கவும் அழைக்கின்றனர். இதனால் நானும், மகளும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கும் எனது மகளுக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மனுக்கள்: இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன், சமூக வலைதங்களில் பதிவு செய்யப்பட்ட அப்பெண்ணின் போட்டோ, செல்போன் நம்பரை உடனடியாக நீக்கவும், மேலும் மோசடியாக திருமணம் செய்தவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் போலீசாருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து இதுதொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications