வேலூர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: கதிர் ஆனந்த் 5.67 லட்சம் வாக்குகளுடன் வெற்றி
வேலூர் : வேலூர் லோக்சபா தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்பி-யான கதிர் ஆனந்த் 5.67 லட்சம் வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.
வேலூர் லோக்சபா தொகுதியில் திமுக சார்பாக சிட்டிங் எம்பி-யான கதிர் ஆனந்த், அதிமுக சார்பாக பசுபதி, பாஜக சார்பாக ஏசி சண்முகம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

வேலூர் தொகுதியில் 5 முறை திமுகவும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக மற்றும் பாமக 2 முறையும் வென்றுள்ளன. இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதி என்பதால், இதுவரை இந்த லோக்சபா தொகுதியில் மட்டும் 6 இஸ்லாமிய வேட்பாளர்கள் வென்றுள்ளனர். 2009ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திமுகவின் அப்துல் ரஹ்மான் 3,60,474 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார்.
அதன்பின் 2014 லோக்சபா தேர்தலில் அதிமுக வேட்பாளர் செங்குட்டுவன் 3,83,719 வாக்குகளை பெற்று வென்றார். தொடர்ந்து 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று வென்றார். இதில் அதிமுக சார்பாக களமிறங்கிய ஏசி சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்று வெற்றிவாய்ப்பை சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இழந்தார்.
லோக்சபா தேர்தல் வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வேலூர் தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 7,215 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். இவருக்கு பின் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் 2,695 வாக்குகளுடன் இருக்கிறார்.
தற்போது 10 மணி நிலவரப்படி திமுகவின் கதிர் ஆனந்த் 40,852 வாக்குகள் பெற்று முன்னிலையில் உளாளர். தொடர்ந்து ஏசி சண்முகம் 24,145 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், அதிமுக வேட்பாளர் பசுபதி 9,615 வாக்குகளும், நாதக வேட்பாளர் மகேஷ் ஆனந்த் 523 வாக்குகள் பெற்று 4வது இடத்தில் இருக்கிறார்.
தற்போது 11.30 மணி நிலவரப்படி திமுகவின் கதிர் ஆனந்த் 1,46,578 வாக்குகள் பெற்று முன்னிலையில் உளாளர். தொடர்ந்து ஏசி சண்முகம் 97,031 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், அதிமுக வேட்பாளர் பசுபதி 30,620 வாக்குகளும், நாதக வேட்பாளர் மகேஷ் ஆனந்த் 7,409 வாக்குகள் பெற்று 4வது இடத்தில் இருக்கிறார்.
தற்போது 3 மணி நிலவரப்படி திமுகவின் கதிர் ஆனந்த் 3,05,974 வாக்குகள் பெற்று முன்னிலையில் உளாளர். பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் 1,80,307 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், அதிமுக வேட்பாளர் பசுபதி 56,913 வாக்குகளும், நாதக வேட்பாளர் மகேஷ் ஆனந்த் 22,937 வாக்குகள் பெற்று 4வது இடத்தில் இருக்கிறார்.
இறுதியாக திமுகவின் கதிர் ஆனந்த் 5,67,792 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் 3,52,421 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், அதிமுக வேட்பாளர் பசுபதி 1,17,410 வாக்குகளும், நாதக வேட்பாளர் மகேஷ் ஆனந்த் 53,035 வாக்குகள் பெற்று 4வது இடத்தில் இருக்கிறார்.
முந்தைய தேர்தல் முடிவுகள்
வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக அதிக முறை வென்றிருந்தாலும், அதிமுக சார்பாக களமிறக்கப்படும் வேட்பாளர்கள் கடுமையான சவாலை அளித்து வந்துள்ளனர். கடந்த முறை 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஏசி சண்முகம் வெற்றியை இழந்ததால், இம்முறை கடுமையான சவால் அளிப்பார் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக தனியாக இருப்பதால், திமுக வேட்பாளருக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2009 லோக்சபா தேர்தல் முடிவுகள் :
அப்துல் ரஹ்மான் ( திமுக ) - 3,60,474
வாசு ( அதிமுக ) - 2,53,081
இராஜேந்திரன் ( பாஜக ) - 11,184
2014 லோக்சபா தேர்தல் முடிவுகள் :
செங்குட்டுவன் ( அதிமுக ) - 3,83,719
ஏசி சண்முகம் ( புதிய நீதிக் கட்சி ) - 3,24,326
அப்துல் ரஹ்மான் ( முஸ்லிம் லீக் ) - 2,05,896
விஜய இளஞ்செழியன் ( காங்கிரஸ் ) - 43,960
2019 லோக்சபா தேர்தல் முடிவுகள் :
கதிர் ஆனந்த் ( திமுக ) - 4,85,340
ஏசி சண்முகம் ( அதிமுக ) - 4,77,199
தீபலட்சுமி ( நாம் தமிழர் கட்சி ) - 26,995
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications