வேலூர் தேர்தல்.. திமுக திரில் வெற்றி.. கதிர் ஆனந்த் எம்பி ஆனார்!
Recommended Video
Vellore Election Results : வேலூர் லோக்சபா தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது-வீடியோ
சென்னை: வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485340 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.அதிமுக கூட்டணியின் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு 477199 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவி உள்ளார். திமுக 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது .
கடந்த 5ம் தேதி, திங்கள்கிழமை, வேலூர் லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குப்பதிவில் ஈடுபட்டனர். 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
இதையடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக ராணிப்பேட்டையிலுள்ள, பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
Newest First Oldest First
வேலூர்: அதிமுக - திமுக இடையிலான வாக்கு வித்தியாசம் தொடர்ந்து குறைகிறது.
அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் 240351 வாக்குகள் பெற்று முன்னிலை.
8 சுற்று முடிவுகளில் அதிமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 237189 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக 3162 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
நாம் தமிழர் கட்சி 12560 வாக்குகள் பெற்றுள்ளது.
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் வேலூரில் தொடர்ந்து முன்னிலை.
ஏ.சி சண்முகம் 198147 வாக்குகள் பெற்று முன்னிலை.
6 சுற்று முடிவுகளில் அதிமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 189851 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக 8296 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
நாம் தமிழர் கட்சி 10046 வாக்குகள் பெற்றுள்ளது.
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் வேலூரில் தொடர்ந்து முன்னிலை.
தற்போது அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 167517 வாக்குகள் பெற்று முன்னிலை.
6 சுற்று முடிவுகளில் அதிமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 151530 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக 15987 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
நாம் தமிழர் கட்சி 8310 வாக்குகள் பெற்றுள்ளது.
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 85200 வாக்குகள் பெற்று முன்னிலை.
4 சுற்று முடிவுகளில் அதிமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 77467 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக 7733 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
நாம் தமிழர் கட்சி 3950 வாக்குகள் பெற்றுள்ளது.
வேலூர் தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 61798 வாக்குகள் பெற்று முன்னிலை.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 58645 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக 3153 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
நாம் தமிழர் கட்சி 2308 வாக்குகள் பெற்றுள்ளது.
வேலூர் தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீண்டும் பின்னடைவு
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் 51869 வாக்குகள் பெற்று முன்னிலை.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 50446 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக 1423 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
நாம் தமிழர் கட்சி 523 வாக்குகள் பெற்றுள்ளது.
READ MORE
English summary
Counting of votes polled during the 5 August elections to Vellore Parliamentary constituency will be taken up today. You can get live updates here.