வேலூரில் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு பணம் ரூ.4 லட்சம் அரசு கணக்கில் சேரலயா! கலெக்டர் ஆபிஸில் யாரிந்த பெண்
வேலூர்: மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு பொதுத்துறை நிறுவனத்தில், அப்பாவி மக்களின் சேமிப்பு பணம் இவ்வாறு கையாடல் செய்யப்பட்டிருப்பதாக பெண் ஒருவர் சொன்ன புகார், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதுகுறித்து இதுவரை உரிய விசாரணை நடத்தப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது.. என்ன நடந்தது வேலூரில்?
இந்திய தபால் துறையின் சேமிப்புத் திட்டங்கள் பல வருடங்களாகவே நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் நிதிப் பாதுகாப்பிற்கு பெரும் அரணாக திகழ்ந்து வருகின்றன..

குறிப்பாக வங்கி சேவைகள் எட்டாத தொலைதூரக் கிராமங்களிலும் தபால் நிலையங்கள் செயல்படுவதால் சாதாரண மக்களும் தங்கள் சிறு சேமிப்பை முதலீடு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.. அரசின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால் இந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது..
தபால் துறையின் சேமிப்புத் திட்டம்
வட்டி விகிதங்கள் மற்ற நிதி நிறுவனங்களை காட்டிலும் நிலையானதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் இருப்பதே இதன் தனிச்சிறப்பாகும்.. இத்தகைய நம்பிக்கைக்குரிய ஒரு பொதுத்துறை நிறுவனத்தில், சாமானிய மக்களின் வாழ்நாள் சேமிப்பு பறிபோகும் அவலம் தற்போது அரங்கேறியுள்ளது..
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினம், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது..
வேலூர் காட்பாடி
டிஆர்ஓ சிவசுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நல அலுவலர் மதுசெழியன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தனர்.. அப்போது காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை பகுதியை சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மனு அளிக்க வந்திருந்தார்.. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென அந்தப் பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யைத் தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போலீசாரும் பொதுமக்களும் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர்.. இந்த சம்பவத்தால் அந்த இடமே ஒரு நிமிடம் பெரும் பதற்றத்திற்கும் பரபரப்பிற்கும் உள்ளானது..
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆட்சியர் சுப்புலட்சுமி, அந்த பெண்ணிடம் விவரங்களை கேட்டு அறிந்து அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்..
அரசு கணக்கு கையாடல்
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அளித்த புகாரில் ஜாப்ராபேட்டை கிளை தபால் நிலையத்தில் தான் சேமித்து வைத்திருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.. தபால் நிலைய ஊழியர் அந்தப் பணத்தை அரசு கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளதாகவும், தன்னைப்போலவே சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு பணத்தை இழந்து தவித்து வருவதாகவும் அவர் குமுறலாக தெரிவித்துள்ளார்..
இது தொடர்பாக ஏற்கனவே காவல் துறையிடமும் ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியின் எல்லைக்கே சென்று இத்தகைய விபரீத முடிவை எடுத்ததாக அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனம்
மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு பொதுத்துறை நிறுவனத்தில், அப்பாவி மக்களின் சேமிப்புப் பணம் இவ்வாறு கையாடல் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.. மக்களின் வாழ்நாள் சேமிப்பு பறிபோனது குறித்து இதுவரை உரிய விசாரணை நடத்தப்படாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.. மாவட்ட தலைநகரின் முக்கியப் பகுதியான ஆட்சியர் அலுவலகத்திலேயே பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற இந்தச் சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, தபால் நிலையச் சேமிப்பின் பாதுகாப்பு குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications