“என் சாவுக்கு காரணம் பி.டி.ஓ தான்”.. கலெக்டருக்கு கடிதம்.. சத்துணவு அமைப்பாளரின் விபரீத முடிவு!
வேலூர்: தன் சாவுக்கு பி.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு சத்துணவு அமைப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரிஜாதம் ( 57). இவர் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். மேலும், கூடுதலாக இரண்டு பள்ளிகளில் பொறுப்பு சத்துணவு அமைப்பாளராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில், பாரிஜாதத்தை வேறு பள்ளிக்கு பணிமாற்றம் செய்ததாக தெரிகிறது. இது குறித்து குடியாத்தம் பி.டி.ஓ மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பாரிஜாதம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு அதிகாரிகள் அவரிடம் கடுமையாக பேசி திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாரிஜாதம் நேற்று முன்தினம் (ஜூலை 4) இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, தன் மரணத்திற்கு இவர்கள்தான் காரணம் என குறிப்பிட்டு அவர் எழுதியதாக காவல் துறையின் கையில் சிக்கியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆய்வாளருக்கு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், 'உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உயர்திரு காவல் ஆய்வாளர் அவர்களுக்கும்... என் மரணத்திற்கு காரணம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகள் தான். எனக்கு இந்த அளவிற்கு மன உளைச்சல் கொடுத்தவர்களை நீங்கள் தான் கேட்க வேண்டும்.
நான் மிகவும் தைரியசாலி. ஆனால் என்னை இவர்கள் செய்த கொடுமை மிக அதிகம். நான் 30 வருடங்களாக அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியின் சத்துணவு மையத்தில் அமைப்பாளராக வேலை செய்கிறேன். என் மன உளைச்சலுக்கு காரணமானவர்களை நீங்கள் தான் கேட்க வேண்டும்.
நான் என் உடன்பிறப்புகளை இழந்து மிகவும் மனவேதனையில் இருந்தேன். என் உடல்நிலையும் சரியில்லாமல் இருந்தது. இருப்பினும், நான் மனம் தளராமல் தினமும் பள்ளிக்கு செல்வேன். யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டேன். என்னை நம்பி என் குடும்பமே உள்ளது. இவர்களை எல்லாம் பிரிந்து செல்கிறோம் என்ற மனவேதனை எனக்கு உள்ளது.

என் மகள், மகனுக்கு ஏதாவது ஒரு வழி செய்யுங்கள். என் மகள் பாசக்கார மகள். அவளுக்கும் 3 குழந்தைகள் உள்ளன. எனது மகன் எனக்கு 5 லட்சம் வரை செலவு செய்துள்ளான். இன்னும் அந்த வேதனையில் இருந்து மீளவில்லை. தயவுசெய்து என் குடும்பத்திற்கு ஏதாவது ஒரு உதவி செய்யுங்கள் ஐயா.. குழந்தைகள் பத்திரம்.. குழந்தைகள் பத்திரம்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரிஜாதம் தற்கொலை குறித்து தகவல் அறிந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாரிஜாதம் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் 194 பிஎன்எஸ் சட்டத்தின் 194-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அந்த கடிதத்தை பாரிஜாதம் தான் எழுதினாரா அல்லது வேறு யாராவது அந்த கடிதத்தை எழுதி வைத்து வழக்கை திசை திருப்புகின்றனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications