வேலூர் எல்லையில் நின்ற மர்ம விலங்கு.. ஒடுகத்தூர் கொட்டகையில் பசுவின் கோலம் பாருங்க.. கிடைத்த தடயம்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒடுகத்தூர் அருகே நடந்த ஒரு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. முக்கியமாக நைட் நேரத்தில் வன விலங்குகள் ஊருக்குள் வருவதால், விவசாயிகளின் கால்நடைகள் மட்டுமல்லாமல் தங்களுக்கு பாதுகாப்பின்மை நிலவுவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.. அப்படியென்ன நேற்று நடந்தது வேலூரில்?
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்துள்ள அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட போடிப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாளைய்யன்.. இவருக்கு 70 வயதாகிறது. தன்னுடைய வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் இரண்டு பசுமாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன்தினம் காலையில் பசுக்களை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, சாயங்கால நேரத்தில் மறுபடியும் வீட்டிற்கு அருகே உள்ள கொட்டகையில் கட்டி வைத்துள்ளார்.

பசுவின் உடம்பெல்லாம்
போடிப்பேட்டை கிராமத்துக்கு பக்கத்திலேயே வனப்பகுதி உள்ளது.. இதனால் நேற்று அதிகாலை நேரத்தில் திடீரென பசுக்கள் அலறும் சத்தம் கேட்டுள்ளது.. இதனால் பாளைய்யன் பதற்றத்துடன் வெளியே ஓடி வந்து கொட்டகைக்கு சென்றார். அங்கு பார்த்தபோது, ஒரு பசு பின் பகுதியில் பலத்த காயங்களுடன் ரத்தம் வடிந்த நிலையில் துடித்துக் கொண்டிருந்தது.
பசுவின் உடம்பெல்லாம் நகங்களால் கீறியதுபோன்ற ஆழமான தடயங்கள் இருந்தன. இதனை பார்த்த பாளையப்பன் கடும் அதிர்ச்சியடைந்தார். ஏதோ மர்ம விலங்கு இரவு நேரத்தில் கொட்டகைக்குள் புகுந்து பசுவை தாக்கியிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்தார்.
கொட்டகையில் கிடைத்த தடயம்
உடனே அவர் அக்கம் பக்கத்தினரை அழைத்து உதவி கேட்டார்... அவர்கள் உடனடியாக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தரவும், அவர்கள் விரைந்து வந்து, பாளையன் வீட்டு பசுமாட்டை பரிசோதித்தனர்.. உடனடியாக அந்த பசுவுக்கு சிகிச்சை அளித்தனர். பசுவின் நிலைமையை தற்போதும் கண்காணிப்பில் வைத்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
வனப்பகுதி மிருகங்கள்
பசுவின் காயங்கள், கொட்டகை சுற்றுப்பகுதியில் கிடைத்த தடயங்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், எந்த மிருகம் கடித்தது என்று தெரியவில்லையாம்.. வனப்பகுதியில் இருந்து வந்த விலங்கு தாக்கியதா? அது எந்த விலங்கு என்பது குறித்து தெளிவுபடுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியதால், சிறுத்தை போன்ற விலங்குகள் ஊருக்குள் வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.வேலூர் மாவட்டத்தில் ஒடுகத்தூர், குடியாத்தம், பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவது பெரும் கவலையை அம்மக்களுக்கு தந்து வருகிறது..
மர்ம விலங்கு எது
வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் கிடைப்பதில் குறைவு ஏற்பட்டால், விலங்குகள் கிராமங்களை நோக்கி வருவதாக வனத்துறையினர் சொல்கிறார்கள்.. இதனால் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இரவு நேரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் போடிப்பேட்டை கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், கிராம மக்கள் இரவு நேரங்களில் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். பசுமாட்டை தாக்கிய விலங்கு எது என்பது விசாரணை முடிந்த பிறகு உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓமலூரிலும் மர்ம விலங்கு
இதெல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்த தம்பதி இதுகுறித்து புகார் அளிக்கவும், டேனிஷ்பேட்டை வனத்துறையினர் மற்றும் விஏஓ சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
-
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம்












Click it and Unblock the Notifications