வேலூர் ஆம்னி பஸ்ஸில் அந்த மூட்டையை திறந்தால்? திருதிருன்னு விழித்த நபர்! அந்த பெண்ணை வீடியோ எடுத்து?
வேலூர்: சட்டமன்ற தேர்தல் கூடிய விரைவில் வரப்போகிறது.. தேர்தல் நெருங்கிவிட்டால், வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்புகள் வழங்குவதும் அதிகரித்துவிடும்.. இதன்காரணமாக வருமானவரித் துறையினரும், அமலாக்க துறையினரும் சந்தேகத்துக்குள்ளாகும் நபர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனையில் ஈடுபடுவதும் வழக்கமாகும். எனினும் இந்த முறை தேர்தலுக்கு முன்பாகவே கண்காணிப்புகள், சோதனைகள் பெருகி வருகின்றன. என்ன காரணம்? வேலூர் ஆம்னி பஸ்ஸில் நடந்தது என்ன?
ஹவாலா பரிவர்த்தனை என்பது கடுமையான சட்டவிரோத செயலாக பார்க்கப்பட்டாலும், இதனை முற்றிலுமே ஒழிக்க முடியாத நிலைமை உள்ளது.

ஒரு நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் சட்டப்பூர்வமான வங்கிகளை நாட முடியாது என்பதால்தான், ஹவாலா முறையை நாடுகிறார்கள்.. இது சட்டவிரோதம் என்பதால்தான், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பணத்தை மாற்றும்போது, அதற்கான முறையான ஆவணங்களை வைத்திருப்பது கட்டாயமாகும்.
சட்டசபை தேர்தல்
தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்கு சில காலங்களே உள்ளதால், பல்வேறு இடங்களில் ஹவாலா பணம் பிடிபட்டு வருவதாக தெரிகிறது.. ஒருவேளை, அரசியல் கட்சிகள் முன்கூட்டியே பணத்தை பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக பதுக்கி வைக்க எடுத்து செல்லப்படுகிறதா என்ற சந்தேகம் பொதுமக்கள் தரப்பிலேயே உள்ளது.
எனவேதான், அனைத்து மாநில எல்லை, மாவட்ட எல்லைகளில் போலீசார் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.. கார், ஆம்னி பஸ்களில் சோதனைகளை விரிவுபடுத்தியும் வருகின்றனர். அந்தவகையில், கடந்த சில மாதங்களாக தமிழக எல்லைகளில் ஹவாலா பணம் பிடிபட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 23ம் தேதி சென்னை டூ மன்னார்குடி ஆம்னி பஸ்சில் 40 லட்சம் ரூபாய் தொகையும், கடந்த மே 31ம் தேதி சென்னை டூ நாகை சென்ற காரில் 50 லட்சம் ரூபாய் ஹவாலா பணமும் , கடந்த ஜுன் மாதம் கடலூர் ஆம்னி பஸ்ஸில் ஒரு இளைஞரிடம் ரூ.35 லட்சம் ஹவாலா பணமும் இருந்துள்ளது தெரியவந்தது.
கலக்கம் - பீதி
போலீசார் கைப்பற்றிய அனைத்து ஹவாலா பணமும், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு மேல் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. பிடிபட்ட தொகையே இவ்வளவு என்றால், இன்னும் பிடிபடாமல் உள்ளது தொகை எவ்வளவு இருககும்? என்ற கலக்கமும் சூழ்ந்துள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், வேலூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.
பெங்களூருவிலிருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று, சம்பவத்தன்று இரவு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர், தன்னுடைய கணவருடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.
வேலூருக்கு முன்புள்ள மாதனூர் பகுதியில், உணவுக்காக பஸ்சை டிரைவர் நிறுத்தியுள்ளார். அப்போது அந்த பெண்ணும், கணவரும் அருகிலிருந்த ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் பஸ்சில் ஏறி உட்கார்ந்துள்ளனர்.
செல்போன் போட்டா
அப்போது பஸ்சிலிருந்த ஒருவர் அந்த இளம் பெண்ணை செல்போனில் போட்டோ எடுத்துள்ளார்.. இதை கவனித்து அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தன்னுடைய கணவரிடம் இதனை முறையிட்டார். அத்துடன், "ஏன் என்னை போட்டோ எடுத்தாய்?" என கேட்டு செல்போனை காண்பிக்குமாறு இளைஞரிடம் சொல்லியுள்ளார்.
ஆனால், இளைஞர் செல்போனை தர மறுத்துவிட்டார்.. கணவரும் அந்த இளைஞரிடம் செல்போனை கேட்டார்.. அப்போதும் இளைஞர் தர மறுத்து, தம்பதியிடம் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டார்.. எனினும், இளைஞரிடம் போராடி, அவரது செல்போனை பிடுங்கி பார்த்தபோது, தன்னுடைய மனைவியை அந்த இளைஞர் போட்டோ எடுத்தது தெரியவந்தது. அந்த போட்டோக்களை உடனடியாக அழித்த கணவர், இதுகுறித்து போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்துள்ளார்.

அதற்குள் ஆம்னி பஸ் வேலூருக்கு வந்துவிட்டது.. அங்கே தயாராக நின்று கொண்டிருந்த வேலூர் வடக்கு போலீசார், கிரீன் சர்க்கிள் பகுதியில் சென்று பஸ்சில் இருந்த இளைஞரை பிடித்து கொண்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.. அங்கு அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போதுதான் இளைஞரின் அடுத்த வண்டவாளம் அம்பலமானது.. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவராம் இந்த இளைஞர்.. சையது இத்ராஸ் என்பது இவரது பெயராம்.. 27 வயதாகிறது.. அவர் வைத்திருந்த பையை வாங்கி போலீசார் கைது செய்தபோது, கட்டுக்கட்டாக ரூ.16 லட்சம் பணம் இருந்துள்ளது.. இந்த பணத்திற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை..
எனவே, சையது இத்ராஸ் கொண்டு வந்த பணம் ஹவாலா பணமா? அல்லது அது யாருடைய பணம் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. பெண்ணை போட்டோ எடுத்ததாக கிளம்பிய புகார், ஹவாலா பணம் வரை கொண்டுவந்துள்ளதால், வேலூரில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications