வேலூரில் தாலுகா ஆபீசுக்கு அவசர அவசரமாக வந்த சோனியா.. நிலம் பட்டா இருக்கா இல்லயா? பரபரத்த குடியாத்தம்
வேலூர்: மாதம் 50,000 வீதம் வரும் டிசம்பருக்குள் பட்டா வழங்கப்பட வேண்டும், 1.11 கோடி பட்டாக்களில் பெயர் மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், வேலூர் மாவட்டத்தில் இளம்பெண் எடுத்த முடிவு, பரபரப்பை தந்து வருகிறது.
தமிழ்நாட்டில் நில வரன்முறை நடவடிக்கைகள் அடிப்படையில் பட்டா வழங்கப்படுகின்றன.. பல்வேறு பிரிவுகளின்கீழ் இந்த வருடத்துக்குள் 5 லட்சம் பட்டா வழங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது..

அந்த வகையில், 6.29 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 3.55 லட்சம் பட்டா ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. மிச்சமுள்ள பட்டாவை மாதம் 50,000 வீதம் டிசம்பருக்குள் வழங்க வேண்டும் என்றும், வருடத்துக்கு 1.11 கோடி பட்டாக்களில் பெயர் மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சிவக்குமார் தம்பதி
இந்நிலையில், இளம்பெண் ஒருவர் தனக்கு பட்டா கிடைக்காததால், தற்கொலை முயற்சி வரை சென்றுள்ளார்.. குடியாத்தம் அடுத்துள்ளது வளத்தூர்.. இங்கு வசித்து வரும் தம்பதி சிவகுமார் - சோனியா. இதில் சோனியாவுக்கு 28 வயதாகிறது.. வளத்தூர் கிராமம் ஆதி திராவிட சமூக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டு மனை இடத்தில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளதால், இங்கேயே கடந்த சில வருடங்களாக சோனியா குடிசை அமைத்து குடும்பத்துடன் தங்கி வருகிறார்.
தாங்கள் தங்கியிருக்கும் இந்த இடத்திற்கு அரசின் அரசு பட்டா வழங்க வேண்டும் என்று சோனியா கேட்டு வருகிறார்.. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு முறை, பல மாதங்களாகவே மனு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த இடத்துக்கு முறையான பட்டா வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு சேலை
இதனால் விரக்தியும் வேதனையும் அடைந்த சோனியா, நேற்று குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் பட்டா வழங்கக்கோரி, மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாலுகா அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், விரைந்து சோனியாவை மீட்டு, மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி எறிந்தனர்.. சோனியா மீது தண்ணீரை காப்பாற்றி, அவரை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று, அங்கிருந்த தமிழக அரசின் இலவச சேலையை தந்து உடையை மாற்றி, பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்..
சமாதான பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசாரும், ஆர்டிஓ சுபலட்சுமி, தாசில்தார் மெர்லின் ஜோதிகா ஆகியோர் சோனியாவை அழைத்து சமாதானம் பேசினார்கள்.. சோனியா குடிசை போட்டு தங்கியிருக்கும் அந்த இடத்துக்கு முறைப்படி பட்டா கிடைக்காது என்கிறார்கள். ஆனால், குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இது தொடர்பாக அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? என்ற எதிர்பார்ப்பு குடியாத்தத்தில் எழுந்துள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications