வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரெடியா? டெல்லி பறக்குது ரிப்போர்ட்.. "ஆடு மேய்ப்பவருக்குதான் "அது" தெரியும்.. சொல்றது யார் பாருங்க

வேலூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் பணியின் மெத்தனத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து ஆதாரங்களை திரட்டி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க போவதாக, மாநில பாஜக துணை தலைவர் நரேந்திரன் கூறியுள்ளார்.. மேலும், அண்ணாமலை என்ன வாட்ச் கட்டிருக்கிறார் என்பதை பற்றித்தான் தமிழக அரசுக்கு கவலை, வேற பிரச்சனையே இவங்களுக்கு இல்லையா? என்றும் காட்டமாக கேட்டுள்ளார்.

வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதுப்பொலி பெற்று வருகிறது... கோட்டையில் மார்பிள் நடைபாதைகள், பழங்காலத்து தூண்டில் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், கோட்டையில் உள்ள ஆங்கிலேயர் காலத்து கட்டிடங்களையும் விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

மொத்தம் 60 வார்டுகளை கொண்ட வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதன் பல்வேறு கட்ட பணிகள் நடந்து கொண்டிருகின்றன.

ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் பணி விறு விறு! தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.10,790 கோடி நிதி! ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் பணி விறு விறு! தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.10,790 கோடி நிதி!

 பாகிஸ்தான் குண்டு

பாகிஸ்தான் குண்டு

ஆனால், எந்த பணியுமே சரியாக நடக்கவில்லை என்றுகூறி மாவட்ட கலெக்டர் ஆபீஸ் எதிரே பாஜகவினர் போராட்டம் செய்தனர்.. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் நரேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.. அப்போது ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசும்போது, திமுகவை கடுமையாக சாடியிருந்தார்.. நரேந்திரன் பேசும்போது, "பாஜக உறுப்பினர்களின் வார்டுகளில், சாலைகளை வேண்டுமென்றே தோண்டி போடுகிறது மாநகராட்சி நிர்வாகம் .. இப்படியே செய்து கொண்டிருந்தால், நாங்கள் எங்களது எம்பிக்களிடம் இருந்து நிதியை வாங்கி, வார்டுகளில் பணிகளை நாங்களே செய்வோம்.

 ஆடு மேய்ப்பவர்

ஆடு மேய்ப்பவர்

அண்ணாமலையின் வாட்ச் பற்றியே பேசி கொண்டிருக்கிறார்களே, ராகுல் காந்தி அணியும் டி-ஷர்ட் பற்றியும், திமுக தலைவர்கள் செல்லும் கார் பற்றியும் பேச வேண்டியதுதானே.. ஆடு மேய்ப்பவருக்கு தான் தெரியும் ரபேல் வாட்ச் வாங்க முடியுமா முடியாதா என்று. அதனால், தகுதி உள்ளதால் அண்ணாமலை ரபேல் வாட்சை கட்டுகிறார் என்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நரேந்திரன், அப்போதும் தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார்.. ஒரு வித்தியாசமும் இல்லை.. சென்னையில் உள்ள மேயர் அங்கே தூங்கிக்கொண்டிருக்கிறார்.. வேலூர் மேயர் இங்கே தூங்கிக்கொண்டிருக்கிறார்... அவ்வளவு தான்..

 தாறுமாறு ரோடு

தாறுமாறு ரோடு

வேலூர் ரோடுகள் எல்லாம், பார்க்கிறதுக்கு பாகிஸ்தான் குண்டு போட்டது போலவே இருக்கு... தரமற்ற முறையிலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகிறது.. உடனடியாக, விரைந்து மேற்கொள்ள வேண்டும்.. அதுவரை எங்கள் ஆர்பாட்டம் தொடரும்... எங்கள் மாநில தலைவர் அண்ணாமலையை அழைத்துவந்து, அவரது தலைமையில் இதே வேலூரில் மிகப்பெரும் ஆர்பாட்டத்தை நடத்துவோம்... அதேபோல வார்டு வார்டாக மக்களை சந்தித்து, அவர்களின் கையெழுத்து பெற்று, அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம்.. அண்ணாமலை என்ன வாட்ச் கட்டிருக்கிறார் என்பதை பற்றி தான் தமிழக அரசுக்கு கவலையா? கஞ்சா விற்பனை, திருட்டு, கொலை, கொள்ளை நடக்கிறதே, அதை பற்றியெல்லாம் அரசுக்கு கவலை இல்லை...

 ஜட்டி

ஜட்டி

அண்ணாமலை என்ன வாட்ச் கட்டிருக்கிறார் என்பதை பற்றித்தான் கவலை.. இன்னும் அவர் என்ன ஜட்டி அணிந்திருக்கிறார் என்று பார்க்கவில்லை... முதலில் தங்கள் முதுகில் உள்ள அழுக்கை திமுக துடைத்து கொள்ள வேண்டும்.. வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஊழல்கள் குறித்து ஆதாரங்களை திரட்டி கொண்டிருக்கிறோம். அதையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உள்ளாம்.. ஒருவேளை அந்த தகவல் வெளியானால், தமிழகத்திலேயே ஊழல் மிகுந்த மாநகராட்சியாக இந்த வேலூர் மாநகராட்சி இருக்கும்.. அப்போது இவர்களே கிடுகிடுத்து போய்விடுவார்கள்" என்றார்.

English summary
Vellore Protest: TN BJP KS Narendran slams dmk government and says about Smart City
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X