100 வருடத்தில் இல்லாத மழை.. புதிய ரெக்கார்ட்.. தமிழ்நாடு வெதர்மேனை வாவ் சொல்ல வைத்த வேலூர்!
வேலூரில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக அதிகமாக கனமழை பெய்து வருகிறது என்று . தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

வேலூர்: வேலூரில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக அதிகமாக கனமழை பெய்து வருகிறது என்று . தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தற்போது வேலூரில் மிக அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. அங்கு கடந்த மூன்று நாட்களாக விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வேலூரில் எப்போது வெயிலான வானிலை நிலவும். மற்ற மாவட்டங்களில் மழை பெய்தாலும் வேலூரில் பெரும்பாலும் எப்போதுமே மழை பெய்யாது.

ஆனால் என்ன
ஆனால் தற்போது மற்ற மாவட்டங்களை விட மிக அதிகமாக வேலூரில் மழை பெய்து வருகிறது. தமிழ்கத்தில் வட மாவட்டங்கள் முழுக்கவே நன்றாக மழை பெய்து வருகிறது. வேலூரில் இன்றும் நாளையும் மேலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

என்ன சொன்னார்
இந்த நிலையில் வேலூர் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார். அதில், வேலூரில் நான் இப்படி ஒரு மழையை பார்த்ததே இல்லை. மிக அதிகமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. வேலூரில் கடந்த சில வருடங்களாக இவ்வளவு மழை பெய்யவில்லை. வேலூரில் ஒரே நாளில் நேற்று முதல்நாள் 166 மிமீ மழை பெய்து உள்ளது.

இப்படி இல்லை
இதற்கு முன் இப்படி அங்கு வானிலை இருந்தது இல்லை. 100 வருடத்திற்கு பின் இவ்வளவு மழை பெய்துள்ளது. இதற்கு முன் 1909ல் ஆகஸ்ட் 8ம் தேதி 106 மிமீ மழை பெய்ததே அங்கு பெய்த கனமழை ஆகும்.

ஏன் வேலூர்
அதை தற்போது வேலூர் முறியடித்து உள்ளது. அங்கு தொடர்ந்து மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.அதேபோல் தருமபுரியை சுற்றியுள்ள மற்ற மாவட்டங்களிலும் மழை பெய்யும். திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரியில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications