வேலூரில் டூவீலரில் பறந்த ரேஷன் பாமாயில்! வீடு வீடாக வாங்கிய 150+ பாக்கெட்.. குடியாத்தம் வீடியோ வைரல்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு வழங்கப்படும் பாமாயில் பாக்கெட்டுகளை சிலர் வீடு வீடாகச் சென்று கூடுதல் விலை கொடுத்து வாங்கிச் செல்வதாக பகீர் புகார் எழுந்துள்ளது.. டூவீலர்களில் மூட்டை மூட்டையாக பாமாயில் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றதாக கூறப்படும் நிலையில், அவர்களை அப்பகுதி இளைஞர்களே மடக்கி விசாரித்த வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்முட்டுக்கூர், தட்டாங்குட்டை, கல்மடுகு, கூடநகரம், மேல்ஆலத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் இந்த சம்பவம் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறாகள்.

Vellore Ration Palm Oil

ரேஷன் பாமாயில்

ரேஷன் கடைகளில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பலனை பெற்று வருகிறார்கள்.. இந்நிலையில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ரேஷன் பாமாயில் பாக்கெட்டுகளை சிலர் வீடு வீடாகச் சென்று கூடுதல் விலை கொடுத்து வாங்கிச் செல்வதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்களை குறிவைத்து அதிகாலை நேரத்தில் இந்த நடவடிக்கை நடைபெறுவதாக கூறப்படுகிறது. காலை 6 மணி முதல் 8 மணி வரை பைக்குகளில் இதற்கெனவே சிலர் கிளம்பி வருகிறார்கள்.. வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் இருந்து ரேஷன் பாமாயில் பாக்கெட்டுகளை வாங்கிச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.

குடியாத்தம் 150 பாக்கெட்டுகள்

அப்படித்தான் நேற்றைய தினமும், தட்டாங்குட்டை கிராமத்தில் சிலர் இதுபோன்று பாமாயில் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு டூ வீலரில் சிலர் சென்றதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த அப்பகுதி இளைஞர்கள் அவர்களை மடக்கி, மூட்டைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளார்கள். அதற்கு மழுப்பலான பதிலை அந்த மர்ம நபர்கள் சொல்லவும், இளைஞர்களே அந்த மூட்டைகளை திறந்து பார்த்துள்ளனர்.. அதில் 150-க்கும் மேற்பட்ட பாமாயில் பாக்கெட்டுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்..

இதையடுத்து, அங்கிருந்த சிலர் தங்களது செல்போன்களில் இந்த காட்சிகளை பதிவு செய்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டனர்.. இதை பார்த்த நெட்டிசன்கள், ரேஷன் பொருட்கள் முறைகேடாக வாங்கப்பட்டு வெளிச்சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்..

குடியாத்தம் மக்கள் கோரிக்கை

இதுகுறித்து அந்த பகுதி சொல்லும்போது, ரேஷன் பாமாயில் பாக்கெட்டுகள் கடைகள், தள்ளுபடி கடைகள் மற்றும் சின்ன ஓட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.. பக்கத்து மாநிலமான ஆந்திராவுக்கும் கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்கிறார்கள்..

ஏழை, எளிய மக்களின் குடும்பச் செலவை குறைக்கும் நோக்கில் அரசு ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது. ஆனால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களை சிலர் கூடுதல் விலைக்கு வாங்கி வெளியில் விற்பனை செய்தால், உண்மையில் அந்த பொருட்கள் தேவைப்படும் குடும்பங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும்.

இதுவரை ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான புகார்கள் மட்டுமே அடிக்கடி எழுந்து வந்த நிலையில், இப்போது ரேஷன் பாமாயிலும் கடத்தப்படுவது கவலையை தருகிறது.. எனவே, குடியாத்தம் சுற்றுவட்டார கிராமங்களில் ரேஷன் பாமாயில் வாங்கிச் செல்வதாக கூறப்படும் நபர்களின் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கண்காணித்து, முறைகேடு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+