"அண்ணா.. ஜோடி மாறிப் போச்சு.." மனைவியை மறந்த ரீல்ஸ் பிரபலம்.. ஒரே சிரிப்பு தான் போங்க! கலகல சம்பவம்

வேலூரில் மேடையில் ஏற்பட்ட குழப்பத்தால் சிரிப்பலை ஏற்பட்டது.

Subscribe to Oneindia Tamil

வேலூர்: குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் மனைவியுடன் சென்ற ரீல்ஸ் பிரபலம் மேடையிலேயே செய்த காமெடி காரியம் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

பொதுவாக விஷேசங்களுக்குத் தம்பதி ஒன்றாகச் சென்றால்... அவர்கள் ஜோடியாக நின்று தான் கிப்டை கொடுப்பார்கள்.. ஆனால் பல நேரங்களில் ஈஸியாக கிப்ட் கொடுத்து ஃபோட்டோ எடுத்துவிட முடியாது.

அங்கு இருக்கும் கூட்டம் கடைசியில் பெரும் குழப்பத்தையே தரும். அப்படித்தான் வேலூரை சேர்ந்த ரீல்ஸ் பிரபலம் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் சொதப்பிய வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

டிஜிட்டல் யுகம்

டிஜிட்டல் யுகம்

டிஜிட்டல் உலகில் ஊடகங்கள் என்பது அனைத்து தரப்பு மக்களிடமும் சென்றடைந்துவிட்டது.. குறிப்பிட்ட சிலர் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற நிலையைத் தொழில்நுட்பம் தலைகீழாகவே மாற்றிவிட்டது. ஒரு மொபைல் போன் இருந்தாலே போதும்.. யார் வேண்டுமானாலும் வீடியோவை பதிவிடலாம். அதற்குக் கட்டணங்கள் எதுவும் இல்லை. இதன் காரணமாகத் திறமை இருந்தாலே போதும்.. எளிதாக மக்கள் அங்கீகாரத்தைப் பெற்றுவிடலாம்.

குடியாத்தம்

குடியாத்தம்

யூடியூப், இன்ஸ்டாகிராம் என்று இதில் பல வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது. இதில் எதாவது ஒரு செயலியில் வீடியோக்கள் ஹிட் அடித்தாலே போதும் எளிதாக ரீச் ஆகிவிடலாம். அப்படி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஷார்ட் வீடியோ வெளியிட்டே ஹிட் அடித்தவர் குமார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வசிக்கும் இவர், குடியாத்தம் குமார் என்ற தனது இன்ஸ்டா பக்கம் மூலம் பிரபலமானவர்.

சிரிப்பு

சிரிப்பு

இன்ஸ்டா ரீல்ஸில் இவர் போடும் வீடியோக்கள் பலரும் ரசிக்கும் வகையிலேயே இருக்கும். இவர் தனது மனைவியுடன் சென்ற போது தான் நிகழ்ச்சியில் ஒரு காமெடி சம்பவம் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் குடியதாத்தம் பகுதியில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றுள்ளது. இதில் குடியாத்தம் குமார் தனது மனைவியுடன் சென்றுள்ளார். ஆனால், கிப்ட் கொடுக்கும் போது அவர் செய்த காரியம் தான் அங்கு அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.

என்னாச்சு

என்னாச்சு

அந்த விழாவில் பெண்ணுக்கு அனைவரும் வரிசையாக கிப்ட் கொடுத்து வந்துள்ளனர்.. குடியாத்தம் குமாரும் ஜோடியாக சென்று கிப்ட்டை கொடுத்துள்ளார். இருப்பினும், அங்கு திடீரென சிரிப்புடன் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குடியாத்தம் குமாருக்கு ஏன் சிரிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அப்போது தான் அங்கிருந்த ஒருவர், "அண்ணா ஜோடி மாறிப் போச்சு" என்று சொல்ல, அதன் பின்னரே அவருக்கு என்ன நடந்தது என்பது புரிந்துள்ளது.

ஒரே கன்பியூஷன்

ஒரே கன்பியூஷன்

அதாவது கிப்ட் கொடுக்க போஸ் கொடுத்துக் கொண்டிருந்த போது குடியாத்தம் குமாருடன் இருந்தது அவரது மனைவியே இல்லை. வேறு ஒருவர்.. இதை உணர்ந்தவுடன் குமாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. சிரித்துக் கொண்டே "ஐயயோ இப்படி ஆகிடுச்சே" என்ற ரேஞ்சில் ரிஆக்ஷன் கொடுத்துள்ளார். நீங்களாச்சும் சொல்லக் கூடாது என்ற ரேஞ்சில் அவர் பார்க்க ஒரே சிரிப்பலை. அதன் பின்னர் இரண்டாவது முறை மீண்டும் தவறு செய்யாமல் அவர் தனது மனைவியுடன் நின்று கிப்ட் கொடுத்துப் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+