Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர் ரேகா போல இருக்காதீங்க.. ஷேர் மார்க்கெட்டில் பணம் முதலீடு.. லாபத்தை கண்டதுமே ஹேப்பி.. அப்பறம்?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் சைபர் கிரைம் போலீஸில், 2 விதமான புகார்கள் வந்துள்ளன.. இந்த 2 புகார்களுமே ஒரே மாதிரியான புகார்கள்.. 2 புகார்களை தந்தவர்களுமே பணத்தை இழந்தவர்கள்.. இந்த புகார்களின் பேரில் வழக்குபதிவு செய்து, போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

4 மாதங்களுக்கு முன்பு, லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து, சைபர் குற்றங்கள் தமிழகத்தில் பெருமளவு அரங்கேற்றப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதாவது, சைபர் கிரிமினல்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து தமிழகத்தில் வசிப்பவர்களை தொடர்புக்கொண்டு ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டது.

Vellore Share market Online Business

இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்து, தமிழகத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்க சுமார் 5 ஆயிரம் சிம்கார்டுகளை முடக்கும் பணியிலும் ஈடுபட்டனர். இதற்காக தொலைத்தொடர்புத் துறையுடன் இணைந்து தமிழக சைபர் கிரைம் போலீசார் அந்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

ஆன்லைன் மோசடிகள்

ஆனாலும், ஆன்லைன் மோசடிகள் பெருகி கொண்டுதான் இருக்கிறது.. அதுமட்டுமல்ல, ஒருசிலர், தாங்கள் செய்வது குற்றம் என்பது தெரிந்திருந்தும்கூட, மோசடி பேர்வழிகளுக்கு தங்களது வங்கிக்கணக்கு விபரங்களை தந்து, கமிஷனை பெற்றுக்கொள்கிறார்களாம்..

அதனால்தான், "மோசடியில் ஈடுபடாவிட்டாலும், அதற்கு உடந்தையாக, தங்களது வங்கிக்கணக்கு விபரங்களை கொடுத்தாலும், அதுவும் குற்றமாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்" என்று கடந்த வாரம் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்திருந்தனர்.. மோசடி நபர்கள் தொடர்பு கொண்டால், உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர். இதோ வேலூரிலும் நூதன மோசடி ஒன்று நடந்துள்ளது.

உண்மை என நம்பிய ரேகா

வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் ரேகா.. பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்ற விளம்பரம், இவரது ஃபேஸ்புக்கிற்கு வந்துள்ளது. உடனே ரேகாவும், அதை உண்மை என நம்பி, அந்த இணைப்பின் வழியாக தொடர்புகொண்டபோது வாட்ஸ்-அப் குழுவில் ரேகா இணைக்கப்பட்டார். உடனே ரேகாவுக்கு, ஆன்லைன் முறையில் பங்கு முதலீடு செய்வது எப்படி? வருவாய் ஈட்டுவது எப்படி? என்பது குறித்தெல்லாம் விளக்கியுள்ளனர்.

அவர்கள் பேசுவதெல்லாம் உண்மை என நம்பிய ரேகா, முதலீட்டு தொகையாக பல்வேறு காலக்கட்டங்களில் ரூ.26 லட்சத்து 55 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளார்... அதற்கான லாபம் ரேகாவின் கணக்கில் வந்ததுடன் முதலீட்டு தொகையை எடுக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை.

சைபர் குற்றப்பிரிவு

எவ்வளவோ முயற்சித்தும் பணத்தை எடுக்க முடியாமல் போனபோதுதான், தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்து, வேலூர் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

ரேகாவை போல, வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த அசோக் குமார் என்பவரும் இதுபோலவே, முகநூல் பக்கத்தின் மூலம் பங்குச்சந்தை முதலீட்டில் பணத்தை எடுக்க முடியாமல் திணறியிருக்கிறார்.. இவரும் ரூ.13 லட்சத்து 86 ஆயிரம் பணத்தை முதலீடு செய்து ஏமாந்து போயிருக்கிறார்.. இப்போது சைபர் குற்றப்பிரிவில் அசோக் குமாரும் புகார் தந்துள்ளார்.. இந்த 2 புகார்கள் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரஜினி குமார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+