வேலூர்: ஓடாதே நில்லு.. சுட்டுடுவோம்.. பிரபல ரவுடியை துப்பாக்கி முனையில் பிடித்த போலீஸ்
வேலூர்: தலைமறைவாக இருந்து ரவுடியை, ஓடாதே நில்லு, சுட்டுடுவோம் என்று துப்பாக்கி முனையில் வேலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
வேலூர் மாவட்டம் காட்பாடியில் வண்டரத்தாங்கல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜானி. ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த ஜானி, தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க வேலூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். அதில் பலன் இல்லாமல் போக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் பெங்களூருவில் அவர் பதுங்கி இருப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். இனிடையே அங்கு பதுங்கி இருந்த ஜானி, போலீஸ் வருவதை அறிந்து தப்பிக்க முயற்சித்தார். அவரை விரட்டிய போலீசார், ஓடாதே நில்லு, ஓடினால் சுட்டுடுவோம் என்று மிரட்டினர்.
அதன்பின்னர் துப்பாக்கி முனையில் மடக்கி ஜானியை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் கைது நடவடிக்கையின் போது, தனது மனைவிக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ காலில் பேசிய ஜானி, போலீசார் தம்மை காப்பாற்றுமாறு கூச்சலிட்டவாறு ஓடியது தெரியவந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications