வேலூரில் நெஞ்சு வலியால் துடித்த பாட்டி.. அரசு மருத்துவமனை எக்ஸ்ரே ரூமில் என்ன நடந்தது தெரியுமா

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் அரசு மருத்துவமனையில் நெஞ்சு வலியோடு உயிருக்கு போராடியிருக்கிறார் ஒரு பாட்டி.. ஆனால் நெஞ்சைப் பரிசோதிக்காமல் காலில் எக்ஸ்ரே எடுத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ளது அதற்கு மேல் அதிர்வலையை கிளப்பி விட்டுள்ளது.

பொதுவாக அரசு மருத்துவமனைகள் என்றால் ஏழை எளிய மக்களின் உயிரைக் காக்கும் நம்பிக்கை மையங்களாகும்.. ஆனால் சமீபகாலமாக அங்கு நடக்கும் சம்பவங்கள் மக்களை பீதியிலும், ஷாக்கிலும் ஆழ்த்தி வருகின்றன..

Vellore Woman

ஒருபக்கம் அருப்புக்கோட்டை, சிவகாசி அரசு மருத்துவமனைகளில் பல கோடி ரூபாயில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டும், உரிய அனுமதி பெறாததால் பயன்பாட்டிற்கு வர முடியாமல் பூட்டிக் கிடக்கின்றன. இன்னொரு பக்கம் கோவை அரசு மருத்துவமனையில் மூட்டைப் பூச்சிகளின் தொல்லையாலும், போதிய ஊழியர்கள் இல்லாததாலும் நோயாளிகள் நிம்மதியாகத் தூங்கக்கூட முடியாமல் தவிக்கிறார்கள்.

வேலூர் அரசு மருத்துவமனை

இந்த லிஸ்ட்டில், வேலூர் அரசு மருத்துவமனையில் நடந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியுள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான மகேஸ்வரி என்பவருக்கு கடந்த 12-ம் தேதி திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது.

அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றவரை பரிசோதித்த டாக்டர்கள் "இதயத்தில் பாதிப்பு இருக்கிறது, உடனே வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுவிடுங்கள்" என்று அனுப்பியிருக்கிறார்கள்.

அவரும் பயத்தோடு 14-ம் தேதி வேலூர் மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். அங்கு பரிசோதித்த மருத்துவர் எக்ஸ்ரே எடுத்துவர சொல்லியிருக்கிறார். எக்ஸ்ரே ரூமுக்கு சென்ற மூதாட்டிக்கு, நெஞ்சைப் பரிசோதிப்பதற்குப் பதிலாக கால் முட்டியை எக்ஸ்ரே எடுத்துத் தந்திருக்கிறார்கள் அங்கிருந்த ஊழியர்கள்.

நெஞ்சு வலிக்காக வந்தேன்

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி, "நெஞ்சு வலிக்காக வந்தேனே, கால் முட்டியை எக்ஸ்ரே செய்கிறீர்களே?" என்று கேட்டதற்கு, "தவறுதலாக எடுத்துவிட்டோம், நாளைக்கு வாருங்கள்" என்று அசால்ட்டாகப் பதில் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் மறுநாளும் மருத்துவமனைக்கு சென்று எக்ஸ்ரே எடுத்து, மருத்துவரைப் பார்ப்பதற்குள் 4 மணி நேரத்திற்கும் மேலாக அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார்.

வேதனை தாங்க முடியாமல் வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார் அந்த மூதாட்டி.. அந்த புகாரில் "எனக்கு கடந்த 12ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், இதயத்தில் பாதிப்பு உள்ளதாக தெரிகிறது. உடனே வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தினர்.

கால் முட்டிக்கு எக்ஸ்ரே

இதனால் நான் கடந்த 14ம் தேதி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு மருத்துவர்கள் பரிசோரித்து, எக்ஸ்ரே டெஸ்ட் எடுத்துவரும்படி சீட்டு எழுதி கொடுத்தனர். இதனால் எக்ஸ்ரே எடுக்கும் அறைக்கு சென்றேன். அங்கு இதயத்திற்கு பதிலாக, எனது கால் முட்டியை எக்ஸ்ரே எடுத்தார்கள். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நான், நெஞ்சுவலிக்காக சிகிச்சைக்கு வந்தால், கால் முட்டியை எக்ஸ்ரே செய்கிறீர்களே எனக்கேட்டேன்.

அதற்கு எக்ஸ்ரே எடுத்தவர்கள், "தவறுதலாக எடுத்து விட்டோம், நாளைக்கு வாருங்கள்" என கூறினர். இதனால் மறுநாள் (நேற்றுமுன்தினம்) மீண்டும் மருத்துவமனைக்கு சென்றேன். எக்ஸ்ரே எடுத்துவிட்டு பின்னர் மருத்துவரை பார்த்தேன். சிகிச்சைக்காக சென்ற என்னை 4 மணி நேரம் அலைக்கழித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது மனுவில் நேரடியாகவே குறிப்பிட்டிருக்கிறார்.

நெஞ்சு வலியோடு துடித்த ஒரு மூதாட்டியை இப்படி அலட்சியமாக நடத்திய வேலூர் மருத்துவமனை ஊழியர்களின் போக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நோயாளிகளின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற அலட்சியப் போக்கை அரசு உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+