வேலூர் சிஎம்சி வாயிலில் தலைவிரி கோலத்துடன் யார் அந்த இளம் பெண்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால் ஆற்காடு சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு நேற்று மாலை இளம்பெண் ஒருவர் திடீரென அமர்ந்து நோயாளிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததால் பரபரப்பு எழுந்தது.

வேலூர் நகரத்தின் மையப்பகுதியில் 19 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவக்கல்லூரி மருத்துவமனையான சிஎம்சி அமைந்துள்ளது. கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிதான் சுருக்கமாக சிஎம்சி என்று வேலூரில் அழைக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் இல்லாத சிகிச்சையே இல்லை..

Who is that young woman with her head uncovered at the Vellore CMC gate What happened

அதேபோல் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிமாநில நோயாளிகள் சிஎம்சி வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இங்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கும். அந்த அளவிற்கு பிரபலமான மருத்துவமனையாகும். நோயாளிகள், டாக்டர்கள், மாணவர்கள், செவிலியர்கள் என தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்லும் மருத்துவமனையாக சிஎம்சி இருக்கிறது.

வேலூர் -ஆற்காடு சாலையில் உள்ள இந்த சி.எம்.சி. மருத்துவமனைக்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் காரணத்தால், சிஎம்சி மருத்துவமனையை சுற்றியுள்ள ஆற்காடு சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு நேற்று மாலை இளம்பெண் ஒருவர் திடீரென அமர்ந்து நோயாளிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் தலைவிரி கோலத்தில் சாமியாடியபடி, சத்தம் போட்டபடி இருந்ததால் அந்த வழியாக சென்ற பலர் அச்சமடைந்தனர். மேலும் அவர் நோயாளிகளுக்கு இடையூறான செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த மருத்துவமனை காவலாளிகள் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர்.

சிறிது நேர போராட்டத்துக்கு பின்னர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போதும் அந்தப் பெண் நடனமாடினார். இதை சாலையில் சென்ற பொதுமக்கள் பலர் வேடிக்கை பார்த்தனர். தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் அந்த பெண் யார்?, எதற்காக இடையூறு ஏற்படுத்தினார்?, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிஎம்சி மருத்துவமனை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+