Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கோபாலபுரத்து விசுவாசி".. கல்லறையில் அந்த போட்டோ + வீடியோ.. திமுக அமைச்சர் மீது அவதூறு.. யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

வேலூர்: அமைச்சர் துரைமுருகன் போட்டோவை கல்லறையில் உள்ளது போல், அதனுடன் சித்தரித்து சில வாசகங்களையும் இணைத்து எழுதி, அதனுடன் ஆடியோவையும் இணைத்து வீடியோவாக சோஷியல் மீடியாவில் பதிவிட்ட அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில், கடந்த 29ம் தேதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றினார். அன்றைய தினம், உருக்கமாக சில விஷயங்களையும் வெளிப்படுத்தினார்..

துரைமுருகன் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு பேசுவவது வழக்கம்.. அதிலும் கருணாநிதி பற்றி எப்போது பேசினாலும் தன்னையும் மீறி, உணர்வுபொங்க கண்கலங்கிவிடுவார்..

 Who is this Pollachi Arunkumar and AIADMK IT wing executive arrested for defaming minister Duraimurugan

கோபாலபுரம் விசுவாசி

அன்றைய தினமும், அவரது பேச்சு சட்டசபையில் மிகுந்த நெகிழ்ச்சியை அந்த தருணத்தில் ஏற்படுத்தியிருந்தது. "நான் நீண்ட நெடுங்காலம் திமுகவில் இருப்பவன். இனிவரும் நாள்களிலும் இருப்பேன். என்னைக்காவது ஒருநாள் மறையப் போகிறவன். அப்போது, என் கல்லறையில் "கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்" என ஒருவரி எழுதினால் போதும்'' என்று நா தழுதழுக்க கூறியிருந்தார்... அமைச்சர் துரைமுருகன் பேசிய இந்த வார்த்தைகளை திரித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் வரம்பு மீறி கடுமையாக விமர்சித்தனர்.

கல்லறை

 Who is this Pollachi Arunkumar and AIADMK IT wing executive arrested for defaming minister Duraimurugan

சிலர் அமைச்சர் துரைமுருகனின் போட்டோவை கல்லறையில் உள்ளது போன்று சித்தரித்து, சில வாசகங்களை குறிப்பிட்டு, அதனுடன் ஆடியோ இணைத்து வீடியோவாக சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளனர்.. இதை பார்த்து திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.. இவ்வாறு அவதூறு பரப்பிய நபர்களை கைது செய்யக்கோரி திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா காட்பாடி போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தினர்..

கோபாலபுரத்து விசுவாசி

 Who is this Pollachi Arunkumar and AIADMK IT wing executive arrested for defaming minister Duraimurugan

அப்போதுதான், இப்படி அவதூறு பரப்பியது அதிமுக பிரமுகர் என்பதும், அவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு 20வது அணி செயலாளர் அருண்குமார் என்பதும் தெரியவந்தது.. அவரிடம் விசாரித்தபோது, அமைச்சர் துரைமுருகன் போட்டோவை ட்விட்டரிலிருந்து பதிவிறக்கம் செய்து, தவறாகச் சித்திரித்து பதிவேற்றம் செய்ததாக அருண்குமார் ஒப்புக்கொண்டார்.. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேலூர் சிறையில் அடைத்தனர். பின்னர், அமைச்சர் துரைமுருகன் குறித்து தவறான பதிவேற்றங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ''சில விஷக்கிருமிகள், அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்தை ஒரு கல்லறையில் இருப்பதைப் போன்று சித்திரித்து, சில வாசகங்களையும் குறிப்பிட்டு, அதனுடன் ஆடியோவையும் இணைத்து வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இவ்வாறு வதந்தி பரப்பி பிரச்னையை ஏற்படுத்தும் நபர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்படி காட்பாடி தி.மு.க வடக்கு பகுதிச் செயலாளர் வன்னியராஜா 01-04-2023 அன்று புகார் மனு அளித்திருக்கிறார். இப்புகார் மனுவானது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்காக பதிவுசெய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இவ்வழக்கில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அ.தி.மு.க தகவல் தொழில் நுட்பப் பிரிவு 20-வது அணி செயலாளர் பொள்ளாச்சி அருண்குமாரை விசாரித்தபோது, அவர்தான் அமைச்சர் துரைமுருகன் புகைப்படத்தை ட்விட்டரிலிருந்து பதிவிறக்கம் செய்து, தவறாகச் சித்திரித்து பதிவேற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டார். எனவே, பொள்ளாச்சி அருண்குமாரை காட்பாடி நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்ப்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் துரைமுருகன் பற்றிய தவறான பதிவேற்றங்கள் முகநூல் பக்கங்களிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+