வேலூரில் திருட போன வீட்டில் தற்கொலை செய்த திருடன்.. அப்போது என்ன நடந்தது?
வேலூர்: வேலூரில் திருடப்போன நபர், திடீரென அந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏன் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அங்கு அப்போது என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
திருடர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். சிலர் பைக்கை மட்டும் திருடுவார்கள். சிலர் தனியாக செல்லும் பெண்களிடம் தங்க சங்கிலியை பறிப்பார்கள். சிலர் அவர்களின் பர்சை, பணத்தை மட்டும் கொள்ளையடிப்பார்கள். சிலர் ஸ்கெட்ச் போட்டு ஆள் இல்லாத வீடாக பார்த்து திருடுவார்கள். சிலர் ஆள் இருந்தாலும் தைரியமாக உள்ளே புகுந்து திருடுவார்கள். சிலர் வங்கிகள், நகைக்கடைகள், பெரிய கடைகளில் ஸ்கெட்ச் போட்டு உள்ளே நுழைந்து பெரிய அளவிலும் திருடுவார்கள். இவர்கள் எல்லாருமே, ஸ்பாட்டில் சிக்கினால் உயிர்பிழைப்பதே கடினம். போட்டு வெளுத்துவிடுவார்கள்.

பொதுவாக வீடுகளில் நடைபெறும் திருட்டு என்பது ஒரே நாளில் கொள்ளையடிக்க திட்டமிட மாட்டார்கள். வீட்டில் ஆள் இல்லையா. அவர்களிடம் பணம் இருக்கிறதா, அவர்கள் வெளியூரில் இருக்கிறார்களா என்பதை நன்கு ஆராய்ந்தே திட்டமிடுவார்கள்.. அப்படி திட்டம் போட்டு வரும் திருடர்கள் அங்கிருந்த பொருட்களை முடிந்தவரை கொள்ளையடிப்பதுடன், சில நேரங்களில் சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு செல்வார்கள். சில திருடர்கள்,அங்கேயே அமர்ந்து சரக்கு அடித்து மட்டையாகவும் செய்வார்கள். இப்படி சரக்கடித்து மட்டையான திருடர்களை பற்றியும், சாப்பிட்டு விட்டு ஓடிய திருடர்கள் பற்றியும் நாம் கேள்வி பட்டிருப்போம். வேலூரில் வித்தியாசமான மற்றும் விவகாரமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருட போன வீட்டில் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
வேலூர் சேண்பாக்கம் ஜீவாதெருவை சேர்ந்த 45 வயதாகும் லட்சுமி,அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சமையல் வேலை செய்து வாழ்ந்து வருகிறார். லட்சுமிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் காமேஸ்வரனுக்கு 17 வயது ஆகிறது. இளைய மகன் தியாகுவுக்கு 15 வயது ஆகிறது. இதில் மூத்த மகன் காமேஸ்வரன் வேலூர் அப்துல்லாபுரத்தில் அரசு ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். தியாகு வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தியாகுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் பிற்பகல் 2 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு விளையாட சென்றிருக்கிறார். பின்னர் மாலை 4 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். வீட்டின் முன்பக்க கதவு பூட்டு மாயமாகி கிடந்தது. மேலும் வீட்டிற்குள் உள்ள அறை கதவும் வீட்டிற்குள் திறந்து கிடந்தது. இதையடுத்து தியாகு வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் மர்மநபர் ஒருவர் இருந்திருக்கிறார். அவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தியாகு நீ யார்? என்று கேட்டார். அதற்கு அந்த மர்ம நபர், நீ யார் என்று அவனிடம் கேட்டிருக்கிறார்.
இதையடுத்து உடனடியாக தியாகு வெளியே சென்று கதவை பூட்டினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு உடனே தகவல் தெரிவித்தார். தனது அம்மாவுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினார். மேலும் மாணவர் தியாகு வேலூர் வடக்கு போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்
அங்கு கதவை திறந்து பார்த்த போது வீட்டுக்குள் இருந்த மர்மநபர் தூக்கில் பிணமாக தொங்கியபடி இருந்தார். இதை பார்த்துஅதிர்ச்சி அடைந்த போலீசார் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். மேலும் அந்த வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. போலீசாரின் விசாரணையில், வீட்டுக்குள் தற்கொலை செய்த நபர் உமராபாத் கடாம்பூர் பகுதியை சேர்ந்த பூபதி (45) என்பதும் அவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறும் போது, தற்கொலை செய்து கொண்ட பூபதி மீது வேலூர் வடக்கு, உமராபாத் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. லட்சுமி வீட்டுக்கு திருட சென்றபோது அங்கு மாட்டியிருக்கிறார். போலீசாரிடம் சிக்கி விடுவோமோ என்ற பயத்தில் அவர் வீட்டில் இருந்த புடவையை எடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிகறார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்கள். திருட சென்ற வீட்டில் திருடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications