செய்தியாளர்களை சந்திக்க ஏன் பயப்படுகிறீர்கள்? பத்திரிகையாளர் கேள்வியால் டென்ஷனான எஸ்பி வேலுமணி

Subscribe to Oneindia Tamil

வேலூர்: செய்தியாளர்களை சந்திக்க ஏன் பயப்படுகிறீர்கள்? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கடுமையாக டென்ஷனானார். மேலும் அந்த கேள்விக்கு அவர் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக பொதுச்செயலாளராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. இவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் எஸ்பி வேலுமணி. முன்னாள் அமைச்சரான இவர் கோவை தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

SP Velumani AIADMK

மேலும் அதிமுக தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், அதிமுகவின் தலைமை கொறடா உள்ளிட்ட முக்கிய பதவிகளில் எஸ்பி வேலுமணி உள்ளார்.

முன்னாள் அமைச்சரான எஸ்பி வேலுமணி அதிமுகவில் தற்போது செல்வாக்கு மிக்க நபராக வலம் வருகிறார். இந்நிலையில் தான் வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சென்றார். தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தந்தை மறைவையொட்டி அவரை நேரில் சந்தித்து எஸ்பி வேலுமணி ஆறுதல் கூறினார்.

அதன்பிறகு அவர் காரில் புறப்பட தயாரானார். இந்த வேளையில் எஸ்பி வேலுமணியிடம் கேள்வி கேட்க முயன்றனர். அதற்கு எஸ்பி வேலுமணி பத்திரிகையாளர்களை சந்திக்காமல் செல்ல முயன்றார். ஆனால் பத்திரிகையாளர்கள் விடவில்லை. எஸ்பி வேலுமணியின் முன்பு மைக்கை நீட்டியபடி கேள்விகளை கேட்டனர்.

இந்த வேளையில், ‛‛லோக்சபா தேர்தல் தோல்வி தொடர்பாக நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி உள்ளீர்கள். அதில் என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்?.. உங்களுக்கு பாஜக வலை விரிச்சதா பேசப்படுகிறதே? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேள்விகள் கேட்டனர்.

அதற்கு எஸ்பி வேலுமணி, ‛‛வரேன்.. வரேன்'' எனக்கூறி கையெடுத்து கும்பிட்டப்படி அங்கிருந்து காரில் ஏறி புறப்பட சென்றார். இந்த வேளையில் ஒருவர், ‛‛ஏன் சார் Press-யை பார்க்க பயப்படுகிறீர்கள். காவிரி பிரச்சனை.. ஆம்ஸ்ட்ராங்க கொலை வழக்கு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேள்வி கேட்டார். இதனால் எஸ்பி வேலுமணி டென்ஷனானார்.

அதாவது காரின் முன்இருக்கையில் அமர்ந்த எஸ்பி வேலுமணி, ‛‛Press-யை பார்க்க நான் ஒன்றும் பயப்படவில்லை. எல்லா ப்ரசும் ஆளும் கட்சிக்கு தான் ஜால்ரா அடிக்கிறீங்க. எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை எங்கே போட்டுள்ளீர்கள். நீங்கள் ஒழுங்காக செயல்படுங்கள்'' என காட்டமாக கூறி சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+