58 வயசில் தேவையா.. நிர்மலா மீது சந்தேகம்.. சூரிமுத்துவின் டார்ச்சர்.. 2வது மனைவியின் பகீர் முடிவு

சாப்பாட்டில் விஷம் வைத்து கணவனை கொன்ற மனைவி கைதானார்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுவிட்டார் மனைவி... இதனால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ளது அகரம் புதுமனை என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் சூரிமுத்து.. 70 வயதாகிறது.

இவரது முதல் மனைவி இறந்து விட்டார்... அதனால், 12 வருஷத்துக்கு முன்பு அதாவது 58 வது வயதில் இன்னொரு கல்யாணம் செய்து கொண்டார்.. மனைவி பெயர் நிர்மலா.. 45 வயதாகிறது.

தகராறு

தகராறு

இவர்களுக்கு 4 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்... இந்த நிலையில். சூரி முத்துவிற்கு, நிர்மலாவின் நடத்தையில் சந்தேகம் வந்துவிட்டது.. இதுதொடர்பாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது... நேற்றும் இப்படித்தான் தகராறு வெடித்தது..

 சூரிமுத்து

சூரிமுத்து

சூரிமுத்து சண்டை போட்டு விட்டு விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார்... வீட்டில் இருந்த நிர்மலா உச்சக்கட்ட வெறுப்பில் இருந்தார்.. அடிக்கடி தகராறு செய்யும் கணவனை கொலை செய்ய முடிவெடுத்தார்.. அதற்காக, சாப்பாட்டில் விஷம் கலந்து, அந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றார். சூரி முத்துவும், அவருடைய சொந்தக்காரர் காந்தராஜ் என்பவரும் அந்த சாப்பாட்டை சாப்பிட்டனர்...

சாப்பாடு

சாப்பாடு

அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர், சாப்பாட்டில் இருந்து வாடை வருவதாக சொன்னார்.. எனவே சாப்பிட்டு கொண்டிருந்த 2 பேரும், சந்தேகம் அடைந்து, அதை எடுத்து முகர்ந்து பார்த்தனர்.. அப்போதுதான், உணவில் வி‌ஷம் கலந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் அவர்களது நிலைமை சீரியஸாகிவிட்டது..

 சிகிச்சை

சிகிச்சை

மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும், சூரிமூத்து இறந்துவிட்டார்.. காந்தராஜுக்கு சிகிச்சை நடந்து வருகிறது.. தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்... அப்போதுதான், நிர்மலாவிடம் விசாரணை நடத்தியதில், நடத்தையில் சந்தேகப்பட்டதால்தான் விஷம் கலந்ததாக வாக்குமூலம் தந்தார்.. இப்போது நிர்மலா சிறையில் உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+