போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு.. பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட பெண்.. அலறி போன வேலூர்!
கல்லூரி மாணவி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்
வேலூர்: போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு, ஒரு பிளேடை எடுத்து தன் கழுத்தை அறுத்து கொண்டு விட்டார் இளம்பெண்.. ரத்தம் அதிகமாக வெளியேறி அப்படியே உயிரிழந்தும் விட்டார்.. இதை கேள்விப்பட்டு வேலூரே அலறிவிட்டது.
வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த புதூர் மேடு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன்.. இவர் ஒரு விவசாயி.. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.. மூத்த மகள் பெயர் கல்பனா.. வேலூரில் உள்ள டிகேஎம் லேடீஸ் காலேஜில் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் வருடம் படித்து வருகிறார்.

இவருக்கு கடந்த ஒரு வருஷமாக கல்யாணம் செய்ய வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள்.. கடந்த வாரம் கூட ஒரு மாப்பிள்ளை பெண் பார்க்க வந்திருக்கிறார்.. வயசு 33 ஆகிறதாம்.
பேங்க் ஒன்றில் வேலை பார்க்கிறாராம்.. கல்பனாவை பார்த்ததுமே மாப்பிள்ளைக்கு பிடித்துவிட்டது.. ஆனால், 33 வயசு என்பதை கேட்டதுமே கல்பனா ஷாக் ஆகிவிட்டார்.. அதனால் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லி உள்ளார்.. ஆனால் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை.. அந்த மாப்பிள்ளையை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் எல்லாரும் தூங்கி கொண்டிருந்தனர்.. அப்போது கல்பனா திடீரென அலறி சத்தம் போட்டார்.. அந்த அலறலை கேட்டு பெற்றோர் ஓடிச்சென்று அவரது ரூமில் பார்த்தனர்.. போர்வையால் உடலை மூடிக் கொண்டு தன் கழுத்தை பிளேடால் வெட்டி கொண்டிருந்தார் கல்பனா.
இதை பார்த்ததும் பெற்றோர் கத்தி கூச்சலிட்டனர்.. ரத்தம் அதிகமாக வெளியேறி அதற்குள் கல்பனா மயங்கிவிட்டார்.. உடனை அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.. ஆனால் கல்பனா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications