தூக்கில் தொங்கிய ராதா.. பிணத்தை எடுக்க விடாமல் சுற்றி சுற்றி வந்த ஜீவன்.. திணறிய போலீசார்
Recommended Video
திருப்பத்தூர்: கடன் தொல்லை கழுத்தை நெரிக்கவும், ராதா தூக்குப்போட்டு தற்கொலையே செய்து கொண்டார். இதையடுத்து, அவர் வளர்த்த நாய், சடலத்தை எடுக்கவிடாமல் ராதாவையே சுற்றி சுற்றி வந்தது பொதுமக்களின் கண்களை குளமாக்கி விட்டது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்துள்ள கிராமம் வெங்களாபுரம். இங்கு வசித்து வந்த தம்பதி தனசேகர்-ராதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
தனசேகர் வாட்டர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். அந்த தொழிலுக்கு நிறைய இடத்தில் கடன் வாங்கிவிட்டு, அதை திருப்பி தர முடியாமல், கடைசியில் 6 மாசத்துக்கு முன்பு வீட்டை விட்டே ஓடிப்போய்விட்டார்.

மன உளைச்சல்
34 வயதான ராதா, தன் குழந்தைகளை வைத்து கொண்டு அவதிப்பட்டு வந்தார். இதில் கணவனுக்கு கடன் கொடுத்தவர்கள் எல்லாம் ராதாவை தொல்லை பண்ண ஆரம்பித்தனர். எல்லோருமே கடனை ஒரேடியாக வந்து கேட்டு நெருக்கியதால், கொஞ்ச நாளாகவே கடுமையான மன உளைச்சலில் இருந்தார் ராதா.

வளர்ப்பு நாய்
நேற்றுகூட ஒருசிலர் கடன் தொகைக்காக அசிங்கமாக பேசியிருக்கிறார்கள். இதனால் மனம் உடைந்த ராதா, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ரொம்ப நேரமாக ராதா வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் சென்றுபார்த்தனர். அப்போது ராதா தூக்கில் தொங்கியவாறும், பக்கத்திலேயே அவர் பாசமாக வளர்த்த நாய் உட்கார்ந்தபடியும் இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.

நெருங்க விடவில்லை
உடனடியாக திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் சொல்லவும், போலீசாரும் விரைந்து சென்று சடலத்தை மீட்க முயன்றனர். ஆனால் அந்த நாயோ, யாரையுமே ராதா பக்கத்தில் நெருங்க விடவில்லை. ராதாவையே சுற்றி சுற்றி வந்தது. பிறகு ராதாவின் உடல் மீது படுத்து கொண்டு கண்ணீர் வடித்தது. போலீசார் அருகில் சென்றதுமே குரைக்க ஆரம்பித்தது.

ராதா
அந்த பகுதி மக்கள் அருகில் சென்றாலும், அவர்களையும் ராதாவிடம் நெருங்கவே விடவில்லை. அங்கிருந்த அனைவருமே என்ன செய்வதென்றே புரியாமல் விழித்தனர்.. கண் கலங்கினர்! பின்னர், ஒரு வழியாக அந்த நாயை போலீசார் அப்புறப்படுத்தி சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாகவும் வழக்கு நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications