காவிரி பிரச்சினை... அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஜெ. உடனடியாகக் கூட்ட வேண்டும்: அன்புமணி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: தமிழ்நாடு இறகு பந்து சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி ஈரோட்டில் நடந்து வருகிறது. இதனை தமிழ்நாடு இறகு பந்து சங்க மாநில தலைவரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாநில தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேரில் பார்த்தார். அப்போது பேசிய அன்புமணி, "ஒலிம்பிக்கில் சிந்து பதக்கம் வென்றதைத் தொடர்ந்து இறகுப் பந்து போட்டி மீது பெற்றோர்களின் கவனம் அதிகரித்துள்ளது" என்றார். மேலும், காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதா உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் எம்.எல்.ஏக்கள் இது தொடர்பாக டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
வீடியோ;












Click it and Unblock the Notifications