கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதையடுத்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கே.ஆர்.பி., அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தெண்பெண்ணை ஆற்று கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நீர் மட்டம் 47.2 அடியை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications