காதலைக் கண்டித்த பெற்றோர்... கிணற்றில் சடலமாக மிதந்த பிளஸ் டூ மாணவி.. சிவகங்கை அருகே பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே காணாமல் போன பிளஸ் டூ மாணவி வினிதா என்பவர் உடல் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த 17ம் தேதி மாலை தண்ணீர் எடுக்கச் சென்ற வினிதாவைக் காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர். உயிரிழந்த வினிதா காதலித்து வந்ததாகவும், அதனை பெற்றோர் கண்டித்ததால் அவர் மாயமானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காணாமல்போன மாணவி வினிதா, இழுப்பக்கோட்டை கிராமத்தில் விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வினிதாவின் மரணம் கொலையா, தற்கொலையா எனப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications