எல்லாம் பணம் காய்க்கும் மரங்கள்! 15 ஆண்டுகளில் பணம் கொட்டும்! ராமதாஸ் வளர்க்கும் 4,200 மரக்கன்றுகள்!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கோனேரிக்குப்பத்தில் உள்ள சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 4,200 மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வரும் ராமதாஸ், இவை எல்லாமே பணம் காய்க்கும் மரங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் நட்டு வைத்து வளர்த்து வரும் 13 வகையான மரக்கன்றுகள் அடுத்த 15 ஆண்டுகளில் பணம் காய்க்கும் மரங்களாக மாறும் என்றும் ஒரே ஒரு மரக்கன்று மட்டும் பழம் காய்க்கும் மரமாக மாறும் எனவும் சிலேடையாக கூறியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதாவது;

''திண்டிவனத்தை அடுத்த கோனேரிகுப்பம் கல்விக் கோயில் வளாகத்தை பசுமைக் கானகமாகவும், மலர்ச் சோலையாகவும் மாற்ற தீர்மானித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.
அந்த நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக கல்விக் கோயில் வளாகத்தில் 14 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன. மொத்தம் 4200 மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. என்னுடைய மேற்பார்வையில் நடப்பட்டிருக்கும் அவற்றில் 13 வகையான மரங்கள் அடுத்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் கொட்டும்.
14-ஆம் வகை மரமான நாவல் மரம் மட்டும் பணம் காய்க்காது. மாறாக பழம் காய்க்கும். அது இதய நோய் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.
மரங்களின் வகைகள்:
1. நீர்மருது
2. மகாகனி
3. பூவரசு
4. சில்வர் ஓக்
5. இலுப்பை
6. வேங்கை
7. செம்மரம்
8. குமிழ் தேக்கு
9. வெண்கடம்பு
10. மலைவேம்பு
11. ரோஸ் வுட் ( Rose Wood )
12. மூங்கில்
13. தீக்குச்சி மரங்கள்
14. நாவல் - இது பழம் காய்க்கும். பணம் காய்க்காது.
மொத்தமுள்ள 4200 மரக்கன்றுகளில் 3000 மரக்கன்றுகள் வனத்துறையால் இலவசமாக வழங்கப்பட்டவை. அதற்காக வனத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் சிவப்பிரகாசம் வாயிலாக 900 மரக்கன்றுகளும், தீனதயாளன் நர்சரியிலிருந்து 300 மரக்கன்றுகளும் பெறப்பட்டு நடப்பட்டன. அவர்களுக்கும் என் நன்றிகள்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications